உடனடிச் செய்திகள்

இஸ்லாமிய தீவிரவாதக் குழுவே பின்னணி என்கிறது ஆங்கில ஊடகம்

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று டெய்லி மிரர் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். அவர்கள் இரண்டு பேருமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்பது கண்காணிப்பு காணொலிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது. ஷங்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள …

Read More »

சகல பல்கலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன

நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து ஏற்பட்ட அவசர நிலையால் அரச, தனியார் பாடசாலைகள், அரச, தனியார் நிறுவனங்கள் இரண்டு நாள்களுக்கு மூடப்படுகின்றன. இந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் வீடு சென்று திரும்பும் வசதியாக இந்த கால அவகாசம் அறிவிக்கப்படாமல் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Read More »

உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு அணியாகச் செயற்படல் பயிற்சியை இராணுவத்தினர் வழங்கவுள்ளனர். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி நாளைமறுதினம் (22) திங்கட்கிழமை மதுறு ஓயா இராணுவ சிறப்புப் படையணி பயிற்சி முகாமில் ஆரம்பமாகவுள்ளது. இராணுவத்தின் முதல்தர பயிற்றுவிப்பாளர்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில் இலங்கை அணியினருக்கு உடல், உள ரீதியான வலிமையை ஊட்டும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை 15 பேர் குழாமில் உள்ளடங்கும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!