விராலிமலை ஜல்லிக்கட்டு உலக சாதனை படைத்தது

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்தனர்.

இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஐந்து மணி நேரத்தில் 647 மாடுகள் வாடிவாசலை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. இன்று விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் அவிழ்த்துவிட பட்டன. அதனால் வாடிவாசலை கடந்து உலக சாதனையை படைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த மார்க் மற்றும் மெலடியா இருவரும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.

விராலிமலை ஜல்லிக்கட்டு திருவிழாவின் முதல் காளையாக அம்மன் கோயில் காளை அவிழ்த்துவிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

21 காளைகளை அடக்கி முதலிடம்

திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற மாடுபிடி வீரர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் காட்டூரைச் சேர்ந்த கார்த்தி என்ற வீரர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்து 800 க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டன. 500 பேர் களத்தில் இறங்க தகுதி பெற்றிருந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தற்காலிக அறுவை சிகிச்சை அரங்கம், ஸ்கேன், மற்றும் 90 மருத்துவர்கள், 90 மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

இந்திய மருத்துவ வரலாற்றிலே முதன் முறையாக விராலிமலையில் மாபெரும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும் இடத்திலேயே அறுவை சிகிச்சை அரங்கம் அமைத்து விராலிமலை அரசு மருத்துவமனை வரலாற்று சாதனை படைத்துள்ளது, இன்றைய நிகழ்வில் இன்னொரு சாதனையாகும்.

இருவர் உயிரிழப்பு

இந்நிலையில் விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை பாய்ந்து மணப்பாறை சொரியம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் ராமு என்பவர் உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதால், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எனும் ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

அத்துடன், காளைகள் முட்டியதில் வீரர்கள் உள்பட 41 பேர் காயமடைந்தனர்.

விராலிமலை உலக சாதனைக்காக நிலக்கத்தப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வாகனங்களில் உள்ள பெரிய திரையில் திரையிடப்பட்டன.


விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டிக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பரிசுப்பொருள்கள்

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!