யாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்

வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10ஆவது தடவையாக யாழ்ப்பண மாநகரில் நடைபெறுகின்றது.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்றைய தினம் (25) ஆரம்பமான இந்தக் கண்காட்சி நாளை மறுதினம் (27)ஆம் திகதி வரை மூன்று நாள்கள்  நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சி கூடங்களை இன்றைய தினம் வெளிக்கிழமை யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் திறந்து வைத்தார்.

பத்தாவது வருடமாக நடைபெறும் இக் கண்காட்சியில் உள்நாட்டு , வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை காட்சிப்படுத்துகின்றனர். அத்துடன் தொழில் வழிகாட்டல்கள் , கல்வி ஆலோசனைகள் , மருத்துவ பரிசோதனைகள் , மருத்துவ ஆலோசனைகள் என்பனவும் இடம்பெறுகின்றன.

அதேவேளை கண்காட்சியினை பார்வையிடுவதற்கு  பாடசாலை சீருடையுடன் வரும் மாணவர்களுக்கு கட்டணங்கள் அறவிடப்படவில்லை. ஏனையவர்களுக்கு 50 ரூபாய் நுழைவு கட்டணமாக அறவிடப்படுகின்றது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!