நீதம் நூல் யாழ்.பல்கலை சட்டத்துறையால் வெளியீடு – உயர் நீதிமன்ற நீதியரசர் சி.துரைராஜா பங்கேற்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் முன்னெடுக்கும் நீதம் – 07 மலர் வெளியீட்டு விழா யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீட மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

இந் நிகழ்வில் இலங்கையின் உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா பிரதம விருந்தினராகவும் , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இதில் யாழ் மாவட்டத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் மூத்த சட்டவாளர்கள் , சட்டபீட மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வெளியிடப்பட்ட நீதம் – 07 நூலின் முதற் பிரதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த உயர் நீதிமன்ற நீதியரசர் சி.துரைராஜாவிற்கு வழங்கப்பட்டது, தொடர்ந்து சிறப்பு பிரதிகளை உயர் நீதியரசர் ஏனையவர்களுக்கு வழங்கி வைத்தார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!