இந்திய அணியைத் துரத்தியடித்தது ஆஸி.

சதமடித்த ஹான்ட்ஸ்கோப்

ஆஸ்திரேலியாவுடனான 4ஆவது ஒருநாள் போட்டியில் தவான் சதமடித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது. ரியூனர் அதிரடியில் ஆஸ்திரேலிய அணியின் ஜோராக வெற்றிபெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி சண்டிகாரில் இன்று நடைபெற்றது.இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் தோனிக்கு  ஓய்வளிக்கப்பட்டதால்  பான்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் – ரோகித் சிறப்பான ஆரம்பத்தை அளித்தனர். இந்த ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 193 ஓட்டங்களைக் குவித்தது.

ரோகித் சர்மா 95 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தவான் 97 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 115 பந்துகளில் 143 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கோலி 7 ஓட்டங்களுடனும் ராகுல் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் பான்ட், சங்கர் அதிரடியாக ஆட இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களையிழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது.

பான்ட் 36, சங்கர் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பாக கம்மின்ஸ் 5 விக்கெட்டுக்களையும் ரிச்சட்சன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 50 ஓவர்களில் 359 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு தலைவர் பின்ஷ் ஓட்டமெதனையும் பெறாமலும் அடுத்து வந்த மார்ஷ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த கவாயா – ஹான்ட்ஸ்கோப் ஜோடி சிறப்பான இணையை வழங்க ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது.

இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்காக  192  ஓட்டங்களைக் குவித்தது. கவாயா 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி சதமடித்த ஹான்ட்ஸ்கோப் 105 பந்துகளில் 117 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துக் களமிறங்கிய ரியூனர் அதிரடியாக ஆடிய போதும் மறுமுனையில் மக்ஸ்வெல் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் அனைத்துப் பந்துவீச்சாளர்களையும் நிலைகுலையச் செய்ந்த ரியூனர் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

ரியூனர் 43 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் அடங்களாக 84 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரமிழந்து 359 ஓட்டங்களைக் குவித்து 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!