மார்பு பரிசோதனைக்கான நவீன எக்ஸ்ரே சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

மார்பு பரிசோதனை எக்ஸ்ரே இயந்திரத்தின் சேவை இன்று புதன்கிழமை  யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள  மார்பு சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த தகவலை யாழ்ப்பாண மாவட்ட காச நோய் தடுப்பு மருத்த அதிகாரி மருத்துவர் சி.யமுனாந்தா தெரிவித்தார் .

“தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தினால் 16 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன இலத்திரனியல் கதிர் இயக்க இயந்திரம் யாழ்ப்பாண காசநோய் தடுப்பு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் இன்று (14) புதன்கிழமை தொடக்கம் இலவசமாக சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நோயாளர் பரிசோதிக்கப்படும்போது மருத்துவர் நேரடியாக அவற்றை அவதானிக்கமுடியும் என்பது சிறப்பம்சமாகும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்முறையாக இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது” என்றும் மருத்துவர் சி.யமுனாந்தா தெரிவித்தார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!