கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் திருநகரில் கைது

கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போதே இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

“ஒருவரிடமிருந்து 4 கிராம் 120 மில்லிக்கிராம் கஞ்சா போதைப்பொருளும் மற்றவரிடமிருந்து 400 மில்லிக்கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் 34 மற்றும் 42 வயதுடையவர்கள். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!