உலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் – 2019 எதிர்வரும் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ.

இதில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி: விராட் கோலி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா (துணைத் தலைவர்) ஷிகர் தவான், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் காப்பாளர்), பாண்டியா, குல்தீப் யாதவ்,  சஹால், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஜடேஜா.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!