முக்கிய சந்தேகநபருடன் தொடர்பா? மேல் மாகாண ஆளுநரிடம் ரிஐடி விசாரணை

நாட்டில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கலந்துகொண்டுள்ள கூட்டம் ஒன்றில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியூதின் பங்கேற்றிருக்கும் ஒளிப்படம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணையை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வெளியாகியுள்ள ஒளிப்படத்தில் அமைச்சர் ரிசாத் பதியூதினின் கூட்டத்திலும் சந்தேகநபர் பங்கேற்றுள்ளார். அதுதொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்ப முயற்சித்த போதும் தொடர்பு கிடைக்கவில்லை.

பிந்திய இணைப்பு

தன்னை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உள்படுத்தியதாக வெளியாகிய செய்திக்கு மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த மறுப்பை அவர் தனது கீச்சகப் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!