ரமழான் நோன்பு செவ்வாயன்று ஆரம்பம்

புனித ரமழான் மாதத்தின் தலைபிறை இன்று தென்படாமையால் வரும் செவ்வாய்க்கிழமை (7) அன்றுதான் புனித ரமழான் மாத நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்று  தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறை குழு கூடிய போது ரமழான் மாதம் தலைப் பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்காத்தால் பெரிய பள்ளிவாசல் இந்த்த் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்களும், முஸ்லிம் சமய கலாசார பிரதிநிதிகளும், உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் படி ஹிலால் 1440ஆம் ஆண்டுக்கான ரமழான் மாதம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் முஸ்லிங்கள் தொடர்ந்து ஒருமாதத்திற்கு நோன்பு நோற்கவுள்ளனர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!