மதுபான சாலைகளை 4 நாள்கள் பூட்டுமாறு கட்டளை

நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளை மே 17ஆம் திகதி தொடக்கம் 4 நாள்களுக்கு மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளைமறுதினம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை 4 நாள்களுக்கு நாடுமுழுவதுமுள்ள மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டே இந்த அறிவிப்பை விடுத்துள்ள மதுவரித் திணைக்களம், கட்டளையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!