புலிச் சீருடையுடன் சடலம் மீட்பு – முள்ளிவாய்க்காலில் சம்பவம்

முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கழிவறை குழி ஒன்றை வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட போதே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது

மேலும் சடலத்துடன் விடுதலைப்புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும் தமிழன் குண்டு என்பவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

மேலும் குறித்த சடலம் மற்றும் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் நாளைய தினம் நீதிவான் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார். அதன் பின் சடலம் அவ்விடத்தில் இருந்து அகற்றப்படும் என தெரிகின்றது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!