அரசியல் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுவேன் – கோத்தாபய தெரிவிப்பு

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நிச்சயமாக நான் போட்டியிடுவேன். நான் அதனை முடிவு செய்து விட்டேன். இல்லாவிட்டால், நான் அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டிய தேவை இல்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியை தள்ளிப்போட்டது அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றும் முயற்சியை தற்காலிகமாக்க் கைவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இந்தச் சட்ட வரைவை கடந்த ஒக்ரோபர் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தச் சட்ட வரைவுக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தால், 1979ஆம் ஆண்டின்  48 ஆவது இலக்க, பயங்கரவாத தடைச் சட்டம் காலாவதியாகும். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் …

Read More »

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

நாட்டில் சமூக ஊடகங்கள் மீதான தடை நான்கு தினங்களின் பின் நீக்கப்பட்டுள்ளது. வைபர், வட்ஸ்அப், யூரியூப் மற்றும் முகநூல் ஆகியவை மீதான தடை இன்று மாலை 6 மணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தாக்குதல்களையடுத்து நாட்டில் சமூக ஊடகங்களுக்கு இடைக்காலத் தடை ஏற்படுத்தப்படிருந்தது. அந்தத் தடையை ஜனாதிபதி கடந்த 30ஆம் திகதி நீக்கியிருந்தார். அதனையடுத்து  நீர்கொழும்பில்  ஏற்பட்ட மோதலையடுத்து மீளவும் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சுமார் 12 மணிநேரத்தில் தடை நீக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை …

Read More »

தனது பதவி நீக்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்றார் பேராசிரியர் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தனது துணைவேந்தர் பதவியை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தவும் தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கந்தசாமியின் நியமனத்தை இடைநிறுத்தி வைக்கவும் இடைக்காலக் கட்டளை ஒன்றை வழங்குமாறு அந்த மனுவில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் கோரியுள்ளார். பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் சார்பில் சட்டவாளர் நிறுவனம் ஒன்று …

Read More »

பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்க றிசாத் 3 தடவைகள் கோரினார்- உண்மையைப் போட்டுடைத்தார் படைத் தளபதி

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன்” இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக தெரிவித்தார். அமைச்சர் றிசாத் கோரிக்கையையே முன்வைத்தார். அதனை அழுத்தமென கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இராணுவ தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க.  “ஏப்ரல் 21ஆம் …

Read More »

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- சபாநாயகரிடம் கையளிப்பு

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இன்று கையளிக்கப்பட்டது. உதய கம்மன்பில உள்ளிட்ட கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று இன்று முற்பகல் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, மகிந்த  அணியின் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Read More »

மாணவர்கள் இருவர் உள்பட மூவரும் பிணையில் விடுவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. அதனையடுத்து மாணவர் …

Read More »

யாழ்.பல்கலை. மாணவர்களுக்கு நாளை பிணை; 4 குற்றச்சாட்டுகளில் ஒன்று மீளப்பெறப்படுகிறது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட 4 சட்ட ஏற்பாடுகளில் ஒன்றை நீக்கி மீதான 3 ஏற்பாடுகளின் கீழ் மாணவர்களுக்கு நீதிவான் நீதிமன்றின் ஊடாக பிணை வழங்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதனை மாணவர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த சட்டத்தரணிகளும் உறுதி செய்தனர். மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  உப விதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான …

Read More »

மதுபான சாலைகளை 4 நாள்கள் பூட்டுமாறு கட்டளை

நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளை மே 17ஆம் திகதி தொடக்கம் 4 நாள்களுக்கு மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளைமறுதினம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை 4 நாள்களுக்கு நாடுமுழுவதுமுள்ள மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டே இந்த அறிவிப்பை விடுத்துள்ள மதுவரித் திணைக்களம், கட்டளையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Read More »

இரண்டாம் தவணைப் பரீட்சையை இரத்துச் செய்யும் ஆசிரியர் சங்கத்தின் யோசனையை நிராகரித்தது கல்வி அமைச்சு

இரண்டாம் தவணைக்கான காலம் சில வாரங்களால் குறைவடைந்துள்ளதால் தவணைக்குரிய பரீட்சையை நடத்தவேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்ததால், அந்த வாரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்ய முடியாமல் போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்த ​வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!