இந்தியா

பாகிஸ்தான் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்; பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.. இந்த தாக்குதலில் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள பாகிஸ்தான், எவருமே கொல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் போர் …

Read More »

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் மறைவு

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தனது 88ஆவது வயதில் இன்று காலை புதுடில்லியில் காலமானார். சமீபகாலமாக அல்சைமர் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஸ் பெர்னான்டசுக்கு, சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இன்று காலை 6 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து புதுடெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார். மூத்த தொழிற்சங்கத் தலைவரான ஜோர்ஜ் பெர்னான்டஸ், ஊடகவியலாளராக, விவசாயியாக, அரசியல்வாதியாக பன்முக ஆளுமை கொண்டவர். முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் உருவாக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய …

Read More »

விராலிமலை ஜல்லிக்கட்டு உலக சாதனை படைத்தது

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்தனர். இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஐந்து மணி நேரத்தில் 647 மாடுகள் வாடிவாசலை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. இன்று விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் அவிழ்த்துவிட பட்டன. அதனால் வாடிவாசலை கடந்து உலக சாதனையை படைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த மார்க் …

Read More »

சபரிமலைக்குச் சென்று திரும்பிய பெண் மீது மாமியார் தாக்குதல்

வெற்றிகரமாக சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய குடும்பப் பெண் மீது, மாமியார் தாக்குதல் நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கடந்தவருடம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் கடந்த 2ஆம் திகதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் பலத்த …

Read More »

இவ்ளோ பெரிய கூந்தலா? வியக்க வைத்த கின்னஸ் சாதனைப் பெண்!

பதினாறு வயதான இந்திய இளம் பெண் அண்மையில் கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார். நிலான்ஷி படேல். குஜராத்தைச் சேர்ந்தவர். தனது கூந்தலை ஐந்தடி ஏழு அங்குலம் நீளத்திற்கு வளர்த்துள்ளது கின்னஸ் உலக சாதனையாக மாறியுள்ளது. இந்தக் கூந்தலை வளர்க்க நிலான்ஷிக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டதாம். நிலான்ஷி இத்தனை நீளக் கூந்தலை எப்படி பராமரிக்கிறார்? ‘ஆச்சரியப்படாதீர்கள்… கூந்தலை அலசுவது வாரத்திற்கு ஒருமுறைதான். கூந்தலைச் சீவிவிட சிக்கெடுக்க எனது அன்பான அம்மா உதவுகிறார். நீளமான கூந்தல் எனக்கு எந்தப் பிரச்னையையும் தரவில்லை. கூந்தலை மடித்துக் கட்டி விளையாட்டுப் பந்தயங்களில் …

Read More »

இப்படியும் ஒரு சவுதி தொழிலதிபர்! – நெகிழ்ந்த இந்திய இளைஞரின் குடும்பம்

சவுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல் சமாரியின் தந்தை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக மகனிடம் நிறுவனத்தை நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார். தந்தை நிறுவனத்தை நடத்தி வந்தபோது அவரிடத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். குடும்பச் சூழல் காரணமாக இந்திய இளைஞர் அவசரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டி நிலை ஏற்பட்டது. அப்போது, மிஸ்பர் அல் சமாரியின் தந்தை 6 ஆயிரம் ரியால் ( இந்திய மதிப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 12 …

Read More »

முத்தலாக் முறைக்கு இந்தியாவில் தடை – நாடாளுமன்றில் சட்டவரைவு நிறைவேற்றம்

இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த முத்தலாக் முறையில் முஸ்லிம்கள் மணநீக்கம் பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட வரைவு இன்று (வியாழக்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட வரைவு தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க, இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர். காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்ட வரைவு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டவரைவு …

Read More »

முகம் தெரியாத முகநூல் காதலனுக்காக தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகள்

முகம் தெரியாத முகநூல் காதலுடன் செல்ல தடையாக இருந்த தாயை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த மகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமம் ஆஞ்சநேயபுரம் 8வது தெருவில் வசித்து வருபவர் திருமுருகன்-பானுமதி. இவர்களது இரண்டாவது மகள் தேவிபிரியா தனியார் கல்லூரியில் பி.கொம் பயின்று வருகிறார். முகநூலில் அதிக நேரம் செலவிடும் பழக்கம்கொண்ட இவருக்கு மைசூரை சேர்ந்த விவேக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும், ஒருமுறையேனும் பார்த்துக்கொண்டதோ, சந்தித்ததோ இல்லை என்ற நிலையில், முக தெரியாத …

Read More »

நாசா நாள்காட்டியில் தமிழக மாணவனின் ஓவியம் இடம்பிடிப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியில், தமிழகம் பழனி பாடசாலை மாணவர் வரைந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. தமிழகம் திண்டுக்கல் – பழனியைச் சேர்ந்த நடராஜன் சந்திராமணி தம்பதியின் மகன் தேன்முகிலன் (13) என்ற மாணவனின் ஓவியமே நாசாவின் நாள்காட்டியில் இடம்பிடித்துள்ளது. நடராஜன் அரச பாடசாலை அதிபராகவும், சந்திராமணி வருவாய் பரிசோதகராகவும் பணியாற்றி வருகின்றனர். தேன்முகிலன், புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா, ஆண்டுதோறும் நாள்காட்டி வெளியிடுகிறது. …

Read More »

எந்தவொரு கணனியையும் உளவு பார்க்கலாம்! – 10 உளவு அமைப்புகளுக்கு இந்திய அரசால் அனுமதி

இந்தியாவிலுள்ள எந்தவொரு கணனியிலும் சேமித்துவைக்கப்பட்டுள்ள தகவல்களைப் படிக்கவோ, அவை மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றம் குறித்து அறிந்துகொள்ளுதல் மற்றும் கண்காணிக்கும் வகையில் வானளாவிய அதிகாரத்தை 10 புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளுக்கு வழங்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக நேற்று வியாழக்கிழமை 20ஆம் திகதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், `நாட்டில் உள்ள எந்த கணனியிலும் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்தல், தகவல் தொடர்புகளை இடைமறித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய அதிகாரங்கள் கீழ்க்காணும் புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ரிசர்ச் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!