உலகம்

மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா  மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது. இந்தியா புல்வாமா-வில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி படையினர் கொல்லப்பட்டதை அடுத்து மசூத் அஸாரை ஐ.நா. பயங்கரவாதியாக அறிவிக்கவேண்டும் என்று இந்தியா சர்வதேச முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், மசூத் அஸாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து, அவருக்கு தடை விதிப்பதற்கு ஐ.நா.வில் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செய்த முன்மொழிவுக்கு …

Read More »

ஜப்பான் அரசர் அகிஹிடோ இன்றுடன் அரியணையில் இருந்து இறங்குகிறார்

ஜப்பான் அரசர் அகிஹிட்டோ அரியணை துறப்பதாக அறிவித்து டோக்கியோவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்றில் தனது கடைசி உரையை வழங்கியுள்ளார். ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் அரியணை துறக்கும் முதல் அரசர் இவர் ஆவார். அகிஹிட்டோவுக்கு 85வயது ஆகிறது. வயது மூப்பின் காரணமாகவும் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாலும் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு பின்னர் முடியரசர் நருஹிட்டோ பதவியேற்கவுள்ளார். அது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். ஜப்பான் அரசர்களுக்கு எந்தவித அரசியல் அதிகாரமும் இல்லை. ஆனால் அவர்கள் நாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றனர். …

Read More »

சிரியாவை இழந்ததற்கான பதிலடியே இலங்கைத் தாக்குதல்கள் – ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கூறுகிறார்

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொலி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். இந்தத் தகவலை நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொலியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று  முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. #VISUAL: …

Read More »

முகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது

உலகம் முழுவதும் முகநூல், இன்ஸ்ரகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூகத்  தளங்களில் பலரின் கணக்கு இயங்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் இந்த்த் தளங்கள் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்து இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் இயக்கநிலையற்றிருந்த முகநூல் கணக்குகள் பின்னர் உலகமும் முழுவதும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி

பிரிட்டன் பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான உடன்பாட்டின் மீது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய மூன்றாவது வாக்களிப்பும் தோல்வியில் முடிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இருந்த நாளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன் மொழிந்த உடன்படிக்கைக்கு 344 பேர் எதிராகவும், 286 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் மே 22 அன்று உடன்படிக்கையின் படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் வாய்ப்பை பிரிட்டன் இழந்துள்ளது. இதற்கான தாக்கங்கள் அதிகமாக இருக்கும் என்றும், ஏப்ரல் 12ஆம் …

Read More »

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு

சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரிய ஜனநாயக படைகள் அறிவித்துள்ளது. ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரிய ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி வருகிறார்கள். சிரியா மற்றும் ஈராக்கில் 88 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பளவை ஐஎஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தனது பிராந்தியத்தை அந்த அமைப்பு இழந்து வந்தாலும், இக்குழு சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே …

Read More »

இந்துக்களை தரக்குறைவாகப் பேசிய மாகாண அமைச்சரை பதவி நீக்கியது இம்ரானின் கட்சி

இந்து மதத்தவர்களை தரக்குறைவாகப் பேசிய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் பாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவி நீக்கப்பட்டுள்ளார். இந்தப்பிரச்சனையில் சோஹன் பதவி விலகியதை மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி பாகிஸ்தானிலும், பஞ்சாப் மாகாணத்திலும் ஆளும் கட்சியாக உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ்.பல்கலையில் கடைப்பிடிப்பு குருதியில் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது யாழ்.பல்கலை. மருத்துவ பீடாதிபதியின் அறிவித்தல் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாகப் …

Read More »

இந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்

“அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பாகவே தற்கொலை குண்டுவெடிப்பில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இந்து மத நம்பிக்கையை சேர்ந்தவர்கள்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இன்று மாலை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “தற்கொலை குண்டு தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம். அதற்கு மதச்சாயம் பூசமுடியாது. ஆனால், இந்த தந்திரம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான உண்மையான காரணிகளைத் தேடவேண்டும்” என்று அவர் உரையில் குறிப்பிட்டார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளே தற்கொலைக் குண்டுத் தாக்குதலை …

Read More »

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை – பாக். பிரதமர் அறிவிப்பு

"In our desire of peace, I announce that tomorrow, and as a first step to open negotiations, Pakistan will be releasing the Indian Air Force officer in our custody." – Prime Minister @ImranKhanPTI pic.twitter.com/gjaaYBCzPn— PTV News (@PTVNewsOfficial) February 28, 2019 இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் …

Read More »

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தமிழரா?

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு காணொலியில், பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டது போல ஒரு காட்சி உள்ளது. அவரது சீருடையில் ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தனது சேவை எண்ணை கூறுவது போல அந்த …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!