உள்ளூர் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ்.பல்கலையில் கடைப்பிடிப்பு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு  இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இன்று மாலை 4.30 மணியளவில் பல்கலைக்கழக சமூகத்தால் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தீபங்கள் ஏற்றி உறவுகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

Read More »

குருதியில் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு  இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று காலை பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர். 10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு  அக வணக்கத்துடன் நினைவஞ்சலி ஆரம்பமாகி 10.32 மணிக்கு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர் பொது சுடர் ஏற்றினார்.  இதையடுத்து. முள்ளிவாய்க்கால் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுடர்களை, உறவுகளை இழந்தவர்கள் ஏற்றினர். உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும்,  கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது …

Read More »

யாழ்.பல்கலை. மருத்துவ பீடாதிபதியின் அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் பீடாதிபதியின் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு : மருத்துவ பீடத்தின் விடுதிகளில் தங்கியிருந்த  சகல மாணவர்களுக்குமான விடுதி வசதிகள் எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படும். 39ஆவது அணிக்கான முதலாவது மருத்துவ பட்ட பரீட்சைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை 21ஆம் …

Read More »

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கிறார். வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரவி விஜய குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் மற்றும் நியமனம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றும் ரவி விஜய குணவர்த்தன, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு …

Read More »

சந்தேகத்துக்கு இடமாக கொக்குவிலில் நடமாடியதாக முஸ்லிம்கள் இருவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சந்தேகததுக்கு இடமாக நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் கேணியடியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் நடமாடுவது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ்.பல்கலையில் கடைப்பிடிப்பு குருதியில் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது யாழ்.பல்கலை. மருத்துவ பீடாதிபதியின் அறிவித்தல் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுவேன் – …

Read More »

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ஆம் திகதி ஆரம்பம் – விடுதி மாணவர்களை 21 வருமாறும் அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ்.பல்கலையில் கடைப்பிடிப்பு குருதியில் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது யாழ்.பல்கலை. மருத்துவ பீடாதிபதியின் அறிவித்தல் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுவேன் – கோத்தாபய தெரிவிப்பு முள்ளிவாய்க்கால் பேரவலம் – 10 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 22.05.2019 புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார். கலைப்பீடம் (இராமநாதன்நுண்கலைப்பீடம்உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்பபீடம், ஆகியவற்றுடன் சித்தமருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் …

Read More »

புலிச் சீருடையுடன் சடலம் மீட்பு – முள்ளிவாய்க்காலில் சம்பவம்

முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கழிவறை குழி ஒன்றை வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட போதே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது மேலும் சடலத்துடன் விடுதலைப்புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும் தமிழன் குண்டு என்பவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது மேலும் குறித்த சடலம் மற்றும் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் …

Read More »

ஏஎல், ஸ்கொலர்சிப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன திட்டமிட்டபடி இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் பி. சனத் பூஜித் தெரிவித்தார். அதன்படி க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 31ம் திகதி வரை இடம்பெறும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, டிசெம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்லி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் …

Read More »

யாழ். நகரில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மதுபானங்கள் சிக்கின – சந்தேகநபர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தமது உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வெளி மாகாணங்களுக்கான பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்ள கட்டடத்தில் இந்த மதுபானங்கள் இன்று பிற்பகல் சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டன. “வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று தொடக்கம் 4 நாள்களுக்கு மதுபான சாலைகள் பூட்டுவதற்கு மதுவரித் திணைக்களம் கட்டளையிட்டது. இந்த நிலையில் சுமார் …

Read More »

யாழ்.நகர் நகைக் கடையில் பணியாற்றிய இந்தியர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் நகரில் உள்ள நகையில் வைத்து இந்தியர்கள் இருவரை சிறப்பு அதிரடிப் படையினர் கைதுசெய்தனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையில் வைத்து இன்று  (17) வெள்ளிக்கிழமை காலை இந்தியர் இருவரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் சுற்றுலா நுழைவிசைவில் வருகை தந்து,  நகை கடையில் வேலை செய்யும் போதே கைது செய்யப்பட்டனர் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். சோதனையின் பிரகாரம், சுற்றுலா நுழைவு …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!