சிறப்புக் கட்டுரைகள்

மன்னார் புதைகுழி: எழும் சந்தேகங்களும் உண்மைகளும் – சட்டமருத்துவ ஆய்வு

இரும்பு 500 வருடமாக துரு பிடிக்காமல் இருக்குமா? முதலில் கண்டெடுக்கப்பட்ட உலோகம் ஆனது இரும்புதானா? என்பதை உறுதி செய்யவேண்டும். பொன், வெள்ளி , செம்பு மற்றும் பித்தளை போன்ற கலப்பு உலோகங்கள் பல நூற்றான்டுகள் சென்றாலும் மிக மிக சிறிதளவே துரு பிடிக்கும் அல்லது துரு பிடிக்காமலே இருக்கும். இனி இரும்பானது எவ்வாறு துரு பிடிக்கின்றது என்பதை இரசாயன ரீதியில் பார்ப்போம். இரும்பானது புதைக்கப்படும் பொழுது மண்ணில் உள்ள ஓட்ஸிசன் மற்றும் அமில உப்புக்களுடன் தாக்கமடையும். இதன் பொழுது Fe2O3, FePO4, Fe2(OH)3 போன்ற …

Read More »

இவர்களையும் கடந்து சென்றோம்: ஓராண்டாகியும் ஏமாற்றமே மிச்சம்

அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2018ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவார் உறுதியளிக்கப்பட்டது. எனினும் தற்போது ஓராண்டு கடந்துவிட்டது. அரசியல்வாதிகளின் உறுதிமொழியால்  ஏமாற்றமடைந்தவர்கள் ஆனந்தசுதாகரின் இரண்டு பிள்ளைகள்தான். கிளிநொச்சியில் 2018ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி நடைபெற்ற தனது மனைவியின் இறுதிச் சடங்குக்காக அரசியல் தண்டனைக் கைதி ஆனந்தசுதாகர் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டார். மனைவிக்கு இறுதிக்கிரியை செய்ய அவருக்கு 3 மணி நேரமே அனுமதி வழங்கப்பட்டது. அதனால் வீட்டில் நடந்த கிரியைகளுடன் அவர் மீள அழைத்துச் செல்லப்பட்டார். …

Read More »

மனித என்புகளில் காபன் -14சி அரைவாசியாக அழிவடைய 5,600 ஆண்டுகளாகும்

சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கார்பன் டேட்டிங் (கதிரியக்கக் கார்பன்  காலக்கணிப்பு/ ரேடியோ கார்போன் டேட்டிங்/ Radio Carbon Dating) என்றால் என்ன? சாதாரணமாக மனித புதைகுழிகளில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்படும் பொழுது அவர்கள் எக்காலத்தில் கொல்லப்பட்டு புதைக்கப் பட்டார்கள் என்பதினை கண்டறிய நாடாத்த படும் ஒரு பரிசோதனையே கார்பன் டேட்டிங் ஆகும். சாதாரணமாக உலகத்தில் உள்ள ஒவ்வொரு மூலகத்திற்கும் சமதானி உண்டு. அவ்வாறே கார்பன் மூலகத்திற்கும் 14/6C என்ற கதிரியக்கமுடைய (Radioactive) சமதானி உண்டு. இச்சமதானியே டேட்டிங் இல் பயன்படுவதால் …

Read More »

தகவல் அறியும் உரிமைச் சட்டமும் வடக்கில் அதன் நிலையும்

– மயூரப்பிரியன் – தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை உள்ளது என மார்தட்டி கொண்டாலும்,  தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்து  பெப்ரவரி 4ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் விழிப்புணர்வு அல்லது அதனை நடைமுறைபடுத்தல் என்பது எவ்வளவு தூரத்தில் நிற்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் அரச அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் தகவல் அறியும் …

Read More »

மைத்திரியை மனம்மாற வைக்க ரணில் பயன்படுத்தியது ஒரே ஒரு துரும்புச் சீட்டு

ஜனாதிபதியாகத் தான் பதவி வகிக்கும்வரை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று உடும்புப்பிடியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, தற்போது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியிருக்கிறார். அதற்கு ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்திய ஒரே ஒரு துரும்புச் சீட்டு மைத்திரிபால சிறிசேன மீதான குற்றவியல் விசாரணைப் பிரேரணை ஆகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுள்ளார் என்பது உயர் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பின் ஊடாக உறுதியாகியது. அதனால் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உயர் நீதிமன்றத் …

Read More »

இனியாவது ஒதுங்குவாரா மகிந்த?

எவ்வழியிலாவது ஒக்டோபர் 26ஆம் திகதி தமக்குக் கிடைக்கப் பெற்ற பிரதமர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள மகிந்த ராஜபக்சவும் அமைச்சுப் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள அவரது சகாக்களும் முன்னெடுத்த அத்தனை நடவடிக்கைகளும் தோல்வியைக் கண்டுள்ளன. கடைசி வாய்ப்பான உயர் நீதிமன்றின் இன்றைய இடைக்காலக் கட்டளையில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த மகிந்த அணியினர் நம்பிக்கையையும் தவிடுபொடியானது. தான் தொழிற்பட விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் மகிந்தவின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதோடு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ள போதிலும் சட்டவாக்க சபையான நாடாளுமன்றின் நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊடாக …

Read More »

வேறுபட்ட யாப்புக்களை வழங்கி ஏமாற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபை – பழைய மாணவர்கள் கடும் அதிருப்தி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையினர் கடந்த மூன்று ஆண்டு காலப் பகுதியினுள் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கும், தர்மகர்த்தா சபையினருக்கும் மாறி மாறி வேறு வேறு திகதிகள் இடப்பட்ட ஆளுநர் சபையின் யாப்புக்களை வழங்கி, அவர்களை ஏமாற்றும் செயலிலே ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரியின் அதிபர் வணக்கத்துக்குரிய கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமனை நோக்கியும், யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜாவை நோக்கியும் கடுமையான‌ குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இது குறித்து முதல்வனுக்குக் கருத்துத் …

Read More »

தலைவர் பிரபாகரனின் 64ஆவது பிறந்த தினம் நாளை

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64ஆவது பிறந்த தினம் தாயகத்திலும் புலத்திலும் நாளை கொண்டாடப்படுகிறது. . நான் மேயர் ஆல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; இலட்சியமும் வேறு” என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர். இருக்காதா பின்னே….? …

Read More »

நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டப்படி செல்லுமா?

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால நியமித்ததை அடுத்து அரசில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், நவம்பர் 9ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 2019 ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி வெளியிடுள்ள வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் தேர்தலை நடத்த முடியாது என சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனவரி 5ஆம் …

Read More »

யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையினரால் தர்மகர்த்தா சபைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் தீர்மானம்

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவரும், உப தலைவரும் பதவி விலகாவிடின் யாழ்ப்பாணக் கல்லூரி நிதியத்தின் தர்மகர்த்தா சபையினர் கல்லூரிக்கு வழங்கும் நிதியினை எதிர்வரும் ஜனவரியில் இருந்து முற்றாக நிறுத்தப் போவதாக எடுத்த முடிவுக்கு எதிராக யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையினர் அமெரிக்காவின் மசசூசஸ்ட் மாநிலத்திலே இருக்கும் நோஃபோக் குடும்ப மற்றும் விருப்புறுதி நீதிமன்றிலே தாக்கல் செய்த வழக்கினை விசாரிப்பதற்கு அந்த நீதிமன்றம் இணங்கி உள்ளது. “தாம் ஒரு தர்ம நிறுவனம் என்ற வகையில் தமது பொறுப்புக்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு மசசூசட்ஸின் சட்டமா அதிபரின் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!