மக்கள் முகம் (வீடியோ)

சுத்தமான யாழ். மாநகரை உருவாக்குவாரா முதல்வர் ஆனல்ட்

யாழ்ப்பாணம் மாநகரில் கழிவகற்றலில் ஈடுபடும் ஊழவு இயந்திரங்கள் மக்கள் நடமாட்டம் அதிகரித்த வேளையில் நகர வீதிகளில் பயணிப்பதால் பொது மக்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக உழவு இயந்திரங்களிலிருந்து சிந்தும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் நகரில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். சுத்தமான நகரம் என்ற கொள்கைகளுடன் பதவிக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் இந்த விடயத்தில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களால் கோரிக்கை விடப்படுகிறது. யாழ்ப்பாணம் மாநகர கழிவகற்றல் உழவு இயந்திரம் …

Read More »

6 மாதம் தடுப்பிலிருந்து விடுதலையான போராளி உதவி கோருகிறார்

பாறுக் ஷிஹான் எனது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உதவி செய்யும் நல்லுள்ளங்கள் எனக்கு உதவுங்கள் என வவுணதீவு பொலிஸாரின் படுகொலையில் சந்தேகநபராக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட கதிர்காமத்தம்பி இராசகுமாரன் என்றழைக்கப்படும் அஜந்தன்(வயது-40) கேட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் மேற்கண்டவாறு கூறியதுடன் பொருளாதாரம் மிக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கத்தை தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது .சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் நிலமை இப்படியாகிவிடக் கூடாது …

Read More »

காரை. – காவலூர் பயணிகள் பாதை பழுதால் பொது மக்களுக்கு சிரமம் – உடன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

காரைநகர் – ஊர்காவற்றுறை  இடையிலான பொது போக்குவரத்துச் சேவை (பாதை) கடந்த 5 நாள்களாக தடைப்பட்டுள்ளதால் அரச ஊழியர்கள், பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். காரைநகர் – ஊர்காவற்றுறையை இணைக்கும் மிதக்கும் இலவச பயண சேவை(பாதை) கடந்த சில தினங்களாக பழுதடைந்துள்ளது. அவ் மிதக்கும் பயண சேவையினை பயன்படுத்தும் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை இடையே பயணிக்கும் பொதுமக்களின் நன்மை கருதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த பல வருடங்களாக மிதக்கும் பயண சேவையினை நடாத்தி …

Read More »

ஊர்காவற்றுறைக்கு வழங்கப்பட்ட குடிதண்ணீர் விநியோக பவுசரை மீளப்பெற்ற அரச அதிபர்- காரைநகரில் தண்ணீர் விநியோகத்தை சீர்படுத்த முடியாத நிலையில்

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் ஏற்பட்டுள்ள குடிதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இடைக்காலத் தீர்வாக அங்குள்ள  மக்களுக்கு தண்ணீரை விநியோகிக்க இடர் முகாமைத்துவ அமைச்சால் வழங்கப்பட்ட பவுசர், மீளப் பெறப்பட்டு காரைநகர் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலரின் அறிவுறுத்தலுக்கு அமையவே தமக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர் வாகனம் மீளப்பெறப்பட்டு காரைநகர் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காரைநகரில் குடிதண்ணீர் விநியோகப் பங்கீட்டு பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து, அங்கு ஏற்கனவே 8 பவுசர் வாகனங்கள் உள்ளநிலையில் யாழ்ப்பாண …

Read More »

உள்ளூர் மென்பானத்துக்குள் தலைமுடி: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

தாகம் தீர்க்க கடையொன்றில் உள்ளூர் மென்பானம் வாங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (22)மதியம் உணவருந்திய பின் அந்த மாணவன் யாழ்ப்பாணம் புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு செய்துள்ளார். அத்துடன் அம்மென்பானத்தை குடிப்பதற்கு முற்பட்ட வேளை சுவைமாறுபட்டிருந்ததை உணர்ந்துள்ளார். இதனால் மென்பானத்தின் மேல் உறையை அவ்விடத்தில் இருந்து அகற்றிய வேளை உள்ளே சளி போன்ற திரவத்துடன் தலைமுடியை ஒத்த பொருள் காணப்பட்டுள்ளது. எனினும் இவ்விடயத்தை கடை உரிமையாளரிடம் குறிப்பிட்டும் கூட எந்தவொரு திருப்தியான பதிலை …

Read More »

மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரியின் நடவடிக்கைகளால் மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் தீவகம் மண்டைதீவு பொலிஸ் காவலரணுக்கு பொறுப்பாக உள்ள தமிழ் பொலிஸ் அலுவலகரின் நடவடிக்கைகள் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் கடும் அதிருப்தியும் விசனம் கொண்டுள்ளனர். உப பொலிஸ் பொலிஸ் பரிசோதகரான அவர், கால்நடைகள் கடத்தல்களுக்கு துணை நிற்பதுடன், அவரது நடத்தைகளும் தவறாக உள்ளது என மண்டைதீவு மக்கள்  குற்றஞ்சாட்டியுள்ளனர். அண்மைக்காலமாக மண்டைதீவு உள்பட அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளிலிருந்து கால்நடைகளைக் கடத்திச் செல்லும் இறைச்சிக் கடை வியாபாரிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழ் பொலிஸ் அலுவலகர் துணை நிற்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண …

Read More »

யாழ். பல்கலையில் பகிடிவதை தொடர்கிறது – மாணவர் ஒருவர் படிப்பை இடைநிறுத்தினார்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததாலும், தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி பல்கலைகழகத்தினுள் வைத்து பகிடிவதை என 4ஆம் வருட முதுநிலை மாணவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றார். தன் …

Read More »

சொத்துக்களுக்காக சித்திரவதைக்கு உள்ளாகுபவரை அதிகாரிகள் மீட்பார்களா?

வடமராட்சி பருத்தித்துறையில் மனநலன் பாதிக்கப்பட்டவரின் சொத்தை அபகிரிப்பதற்காக அவருக்கு தொடர்ச்சியாக சித்திரவதை இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. பருத்தித்துறை சாரையடி வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி லிங்கேஸ்வரன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரே அவரது உறவினர்கள் எனக் கூறுபவர்களால் சித்திரவதைக்குள்ளாகின்றார். இவர் பிறப்பிலிருந்தே மனநலன் குன்றியவர். இவர் தனது தாய் தந்தையரின் மறைவுக்குப் பின்னர் தாயின் சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஏராளமான பூர்வீகச் சொத்துக்கள் உள்ளன. இவரை  பாதுகாவலர்களான சகோதரியின் உறவுகள் …

Read More »

கரவெட்டி பிரதேச மக்களை திரும்பிப்பார்ப்பார்களாக எம்.பிக்கள்?

கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவில் பிரதேச செயலரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தமக்கு நெருக்கமானவர்களை தெரிவு செய்து வருவதாகவும் மழை காலங்களில் வசிக்க முடியாத குடிசைகளில் வாழும் பலரை அவர்கள் புறக்கணித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் யாழ்ப்பாண மாவட்ட செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கரவெட்டி பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச மக்கள் பலர் விசனம் வெளியிட்டுள்ளனர். வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவினை கரவெட்டி பிரதேச செயலக அதிகாரிகள் விதிமுறைகளுக்கு முரணாக …

Read More »

சாவகச்சேரி மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டடப் பணிகளில் மோசடியா?

சாவகச்சேரி மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதால் மலக்கழிவுகள் அகற்றலில் சாவகச்சேரி நகர சபை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளது. 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் சாவகச்சேரி நகரசபை, சுன்னாகம் மற்றும் கரவெட்டி பிரதேச சபைகளும் மலச்சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன. இம்மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் அமைப்படுகின்ற மலச்சுத்திகரிப்பு ஒப்பந்தத்தை மாவட்ட செயலகம் நேரடியாக கேள்வி கோரி ரூபா 7 கோடியே 53 லட்சத்து 23 ஆயிரத்து 600 (சுமார் 75மில்லியன்) க்கு ஒரு ஒப்பந்தகாரரிடம் வழங்கியிருந்தது. இதில் சாவகச்சேரியில் அமைக்கப்படுகின்ற மலச்சுத்திகரிப்பு …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!