மருத்துவம்

கலப்பட சாராயத்தினால் பறிபோகும் உயிர்கள்

சட்ட மருத்துவர் கனகசபாபதி வாசுதேவா யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றுமுன்தினம் சுமார் 7 ஆயிரம் 500 லீற்றர் எதனோல் (துாய மதுசாரம்) அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது. பனம் சாராயத்துடன் கலப்படம் செய்யப்பட இருந்த நிலையில் அது கைப்பெற்றபட்டது. கடந்த இரு வருடங்களாக திக்கம் வடிசாலையில் உற்பத்தியாகும் பனம் சாராயத்துடன் இவ்வாறு கலப்படம் நடைபெற்றுள்ளதா? என்பதை சந்தேகிக்க இச்சம்பவம் வைத்துள்ளது. சாதாரணமாக பனம் சாராயமானது கள்ளில் இருந்தே பலபடி முறைகளுக்கூடாக உற்பத்தி செய்யப்படுகின்றது. வருடத்தின் குறித்த சில மாதங்களில் கள்ளு உற்பத்தி குறைவாக இருப்பதன் காரணமாக பனம் …

Read More »

இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் மனஎழுச்சி நோய்

பைபோலர் டிஸ்ஓர்டரால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வாரத்திலேயே அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். மனஎழுச்சி நோய் உள்ளவர்கள் மூன்றாம் நபரிடம் பேசும்போது பிரச்னைகள் உருவாகும். உங்களுடைய நட்பு வட்டத்தில் அல்லது நெருக்கமான உறவுகளில் யாரோ ஒருவர் ஒரு கேள்விக்கு பத்து விதமான பதில்களை சொல்வார்கள். ஆனால், நேரிடையான பதில் அவர்களிடம் இருந்து வராது. உங்களை அடுத்த கேள்விக்கு நகர்த்தவே விடமாட்டார்கள்.   ப்பா… போதுமடா சாமி’ என்று விலகி ஓடிவந்திருப்பீர்கள். ஆமாம்.. இல்லை’ என்பதில் ஏதோ ஒன்றாக இருக்கும்.  இன்னொரு விதமும் உண்டு. பத்துக் கேள்விகள் …

Read More »

கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் `வில்சன்’ நோய்கள்

ஊட்டச்சத்துக் குறைபாடு… வளரும் நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகி வரும் ஓர் அபாயம். இன்றைய சூழலில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் உலக நாடு முழுவதிலும் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதன்காரணமாக, புதுப்புது நோய்கள் தாக்குகின்றன. உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறித்த ஏராளமான விழிப்புணர்வுப் பரப்புரைகள் உலக சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளையும், மானியங்களையும் ஆளும் அரசுகள் வழங்கி வருகின்றன. மனிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். ஆனால், அதீத ஊட்டம் ஆபத்து ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். விட்டமின்களோ, …

Read More »

காது ஆரோக்கியத்துக்கு செவி சாய்ப்போம்!

`செவிக்கு உணவு இல்லாதபோதே வயிற்றுக்கு ஈய வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். கேள்விச் செல்வம்தான் ஒரு மனிதனின் ஆகப் பெரிய செல்வம் என்பது நம் முன்னோர் நமக்குக் காட்டிய வழி. நம் உடலில் பல உறுப்புகள் உண்டு. அவற்றில் காதுகள் மிக முக்கியமானவை. காதுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவது எப்படி… காதுகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி? விரிவாக விளக்குகிறார் தமிழகத்தின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சொ.வெங்கட கார்த்திகேயன். “வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று காதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். காது மடல், …

Read More »

உங்கள் குழந்தைக்கு மனநோய் இருந்தால் கண்டறிவது எப்படி?

உடல்நலக் குறைபாட்டுக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பதை போல மனநல சிகிச்சைக்கு உடனடியாக சிகிச்சை எடுக்கும் வழக்கம் மிகவும் பரவலாக உள்ளதா? என்றால் நிச்சயம் இல்லை என்றே கூற முடியும். உடல்நலக் குறைபாடு இருப்பது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியும். ஆனால், மனநலக் குறைபாடு இருப்பது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட நபருக்கே சில நேரங்களில் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு. ஆண்டுதோறும் ஒரு கருத்தை மையமாக வைத்து ஒக்டோபர் 10ஆம் திகதியன்று உலக மனநல நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையப்பொருள் ‘மாறி வரும் உலகில் …

Read More »

அடிக்கடி விக்கல் வருதா? தண்ணீர் குடித்தும் நிற்கவில்லையா? அப்போ இதைப் படிங்க!

ஜீரண மண்டலத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதற்கான எளிய அறிகுறிதான் விக்கல். இந்த விக்கல் எப்போதெல்லாம் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள். வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் என்றொரு தடுப்புச் சுவர் போன்ற பகுதி உண்டு. இதுதான் வயிற்றையும், நுரையீரலையும் தனித்தனியே பிரிக்கிறது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்குள் ஒக்ஸிஜன் சரளமாகச் செல்வதற்கு வசதியாக இந்த உதரவிதானம் மேலும், கீழுமாக இயங்கக் கூடியது. இது நமது உடலுக்குள் சாதாரணமாக நடக்கும் ஒரு செயல்பாடு. சிற்சில சமயங்களில் மூச்சு விடும் போது உதரவிதானம் …

Read More »

உங்களது கண்களை காப்பாற்ற புதிய ‘20-20-20’ விதி

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரியவர் சிறியவர் என வயது வரம்பே இல்லாமல் அனைவரும் நீண்ட நேரம் கணினித் திரையையோ அல்லது ஸ்மார்ட் போன்களையோதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனால் அதிகம் பதிக்கப்படுவது நமது கண்கள். கண் பிரச்னைகள் ஒரே இரவில் வரக்கூடியதும் இல்லை, அதே போல் சட்டென்று சரியாகக் கூடியதும் இல்லை. ஒரு முறை பாதிக்கப்பட்டுவிட்ட கண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாது, சில சமயங்களில் அறுவை சிகிச்சைகளும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. தலைவலி, உலர்ந்த …

Read More »

சிறுமியைக் கொலை செய்ததாக ஒருவர் ஒப்புதல்: ஆறு பேரிடம் தடுத்துவைத்து விசாரணை

“சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் மாறுபட்ட தகவல்களை வழங்கி அவர் மன நோயாளி போல் நடிக்கிறார்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 6 பேர் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர். சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் …

Read More »

உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா? ஓர் மருத்துவரீதியான அலசல்

  உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் உடுவில்- சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில் கடந்த வியாழக்கிழமை (7) இடம்பெற்றது. குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 15ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாள்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது. …

Read More »

மழைநீரைக் குடிநீராகப் பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தொற்றுநோய்களான வாந்திபேதி, வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல் போன்றவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். பல சிறுநீரக நோய்களான சிறுநீரகப்பழுது, சிறுநீரகக்கற்கள் தோன்றுதல், சிறுநீர் அடைப்பு போன்றவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். புற்றுநோய் தோன்றும் வீதத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ளலாம். தீய இரசாயனப் பதார்த்தங்கள் உடலில் சேர்ந்து உடல் நோய்வாய்ப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம். நீரிலுள்ள மேலதிக கல்சியம் இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பாரிசவாதம் என்பன ஏற்படும் வீதம் அதிகமாகும். நீரைக் கொதிக்கவைப்பதன் மூலம் அதிலுள்ள கல்சியத்தைப் பூரணமாக அகற்ற முடியாது. மழைநீரில் கல்சியம் இல்லை. எனவே, மழைநீரைப் பாவிப்பதன் மூலம் மேலதிக …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!