விளையாட்டு

March, 2019

 • 17 March

  கிளிநொச்சி விளையாட்டு கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார் தர்ஜினி சிவலிங்கம்

  கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண  விளையாட்டுத்தொகுதிகள் கட்டடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி திறந்து வைத்தார். வடக்கு மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியை  வீர, வீராங்கனைகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பி.ப 3 மணிக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் ஆரம்பமானது. விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து வடமாகாண விளையாட்டுத்தொகுதிகள் கட்டடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி திறந்து …

 • 13 March

  மண்கவ்வியது இந்தியா: தொடரை வென்றது ஆஸி.

  இந்திய அணியை 5ஆவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி தொடரை 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியிடம் ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களையிழந்த்து கோலி படை. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடைபெற்ற ரி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்தியாவில் நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலியா ரி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் …

 • 10 March

  இந்திய அணியைத் துரத்தியடித்தது ஆஸி.

  சதமடித்த ஹான்ட்ஸ்கோப் ஆஸ்திரேலியாவுடனான 4ஆவது ஒருநாள் போட்டியில் தவான் சதமடித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது. ரியூனர் அதிரடியில் ஆஸ்திரேலிய அணியின் ஜோராக வெற்றிபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி சண்டிகாரில் இன்று நடைபெற்றது.இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் தோனிக்கு  ஓய்வளிக்கப்பட்டதால்  பான்ட் அணியில் சேர்க்கப்பட்டார். நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் – ரோகித் சிறப்பான ஆரம்பத்தை அளித்தனர். இந்த ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 193 ஓட்டங்களைக் குவித்தது. ரோகித் சர்மா …

 • 9 March

  வடக்கின் போர் சமநிலையானது

  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் போர் 113ஆவது கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்தது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, சென். ஜோன்ஸ் கல்லூரியை துடுப்பெடுத்தாடப் பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி 181 ஓட்டங்களில் சகல …

 • 9 March

  “பொன் அணிகள் போர்” மீள ஆரம்பம் – ஏப்ரல் 11இல் ஒருநாள் போட்டி

  வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க பொன் அணிகள் போர் கிரிக்கெட் தொடர் மீளவும் ஆரம்பிக்கப்படுகிறது. இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் 4 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் ராஜன் – கதிகாமர் வெற்றிக்கிண்ணத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் போட்டியை வரும் ஏப்ரல் 11ஆம் திகதி நடத்தப்படவுள்ளது என்று யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையே 97 ஆண்டுகளாக பொன் அணிகள் போர் கிரிகெட் …

 • 9 March

  கிளிநொச்சி மாணவிகள் இருவர் றோல் போல் போட்டியில் சாதித்தனர்

  கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த மாணவிகள் இருவர் இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண றோல் போல் போட்டியில் விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா, நடராசா வினுசா ஆகிய இருவரும் தேசிய றோல் போல் அணியில் விளையாடி சாதித்துள்ளனர். ஆசியக் கிண்ண றோல் போல் போட்டிகள் பெப்ரவரி 21ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதிவரை இந்தியாவில் இடம்பெற்றன. அதில் இலங்கை அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் விளையாடிய உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா, நடராசா வினுசா மாணவிகள் …

 • 8 March

  கோலி சதமடித்தும் இந்திய அணி ஆஸியிடம் வீழ்ந்தது

  ஆஸ்திரேலியாவுடனான 3ஆவது ஒருநாள் போட்டியில் கோலி சதமடித்தும் இந்திய அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கவாயா 104 ஓட்டங்களையும் அணித்தலைவர் பின்ஷ் 93 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 31.5 ஓவர்களில் …

 • 8 March

  வடக்கின் போரில் விறுவிறுப்பு: ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் இரு அணிகளும்

  வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் விளையாடுவதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 14 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களை எடுத்து ஆடிவருகிறது. இதனால் நாளை மூன்றாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் விறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் …

 • 7 March

  வடக்கின் போரில் யாழ்.மத்திய கல்லூரி நிதான ஆட்டம்

  ‘வடக்கின் போர்’ கிரிக்கெட் போட்டின் முதல் நாள் ஆட்டத்தில் 12 விக்கெட்டுக்கள் சாய்க்கப்பட்டன. இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையிழந்து 59 ஓட்டங்களை எடுத்துள்ளது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 113ஆவது வடக்கின்போர் துடுப்பாட்டத்தில் இன்று (7) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியை  துடுப்பெடுத்தாடப் அழைத்தது. முதலில் …

 • 7 March

  வடக்கின் போர் ஆரம்பம்: சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு

  வடக்கின் போரில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது. ‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி இன்று காலை கோலாகலமாக ஆரம்பமானது. இரண்டு கல்லூரிகளின் முதல்வர்கள் தலைமையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் வீரர்கள் அறிமுகத்தையடுத்து நாணயச்சுழற்சி இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் …

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!