உடனடிச் செய்திகள்

நீதம் நூல் யாழ்.பல்கலை சட்டத்துறையால் வெளியீடு – உயர் நீதிமன்ற நீதியரசர் சி.துரைராஜா பங்கேற்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் முன்னெடுக்கும் நீதம் – 07 மலர் வெளியீட்டு விழா யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீட மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . இந் நிகழ்வில் இலங்கையின் உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா பிரதம விருந்தினராகவும் , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். இதில் யாழ் மாவட்டத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். …

Read More »

யாழ்.வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய கொடியேற்றம்

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(03) முற்பகல்-10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.தொடர்ந்து 21 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்  இருபதாம் திகதி புதன்கிழமை காலை-09 மணிக்குப் பஞ்சரத பவனியும், மறுநாள் வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தோற்சவமும் நடைபெறும்.படங்கள்: ஐ.சிவசாந்தன்

Read More »

மகாசிவராத்திரி விழா விஞ்ஞாபனம்

நிகழும் மங்கலகரமான விளம்பி வருடம் மாசி 20ம் நாள் (04.03.2019) திங்கட்கிழமை மகாசிவராத்திரியை முன்னிட்டு நாயன்மார்கட்டு திருக்குளக்கரையில் எழுந்தருளியிருக்கின்ற விநாயகப்பெருமானுக்கு மாலை 4.00 மணிமுதல் அடியவர்களுடைய விஷேட பொங்கலும், மாலை 6.30 மணிக்கு விஷேட பூஜையும் நடைபெற திருவருள்கை கூடியுள்ளது. நாயன்மார்கட்டு நாயன்மார் குருபூசை மடத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவலிங்கப் பெருமானுக்கு மகாசிவராத்திரி நன்நாளில் மாலை 6.00 மணிமுதல் அடியவர்கள் தங்கள் கரங்களினால் பால், தயிர், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்தும், சிவபுராண பாரயணம் செய்தும், மெய்யடியார்கள் ஆசாரசீலர்களாக வருகைதந்து மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொன்டு …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!