உடனடிச் செய்திகள்

‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு

படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொலி பாடல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. ஈழத்தில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களில் ஒருவரான மிதுனா இப்பாடலை இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சய், கபில் சாம், ஜினு, நியூட்டன், புவிகரன், சசிக்குமார், தமிழ்மதி, வாணி, செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள் நடித்துள்ளனர். பாடல் வரிகளை மாணிக்கம் ஜெகன் எழுதியுள்ளார். சிவா பத்மஜன் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கோகுலன் மற்றும் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் ஒளிப்பதிவினை ஸ்டாண்டட் வீடியோ செய்துள்ளது …

Read More »

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

சிறிலங்கா கிரிக்கெட்டின் டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு போக்குவரத்து நீதிமன்ற நீதிவான், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த கட்டளையிட்டார். கொழும்பு பொரளையில் நேற்று அதிகாலையில் காரில் பயணித்த திமுத் கருணாரத்ன, முச்சக்கர வண்டி ஒன்றை மோதி விபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய போது அவர் மதுபோதையில் இருந்தார் என்ற குற்றச்சாட்டையும் பொலிஸார் முன்வைத்தனர். பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட திமுத் கருணாரத்ன, இன்று கொழும்பு போக்குவரத்து நீதிமன்ற நீதிவான் சாளிய சன்ன அபயவர்த்த …

Read More »

கருகம்பனை மாட்டு வண்டிச் சவாரி; சீறிப் பாய்ந்த காளைகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம்  ஆகியன இணைந்து மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தனர். யாழ். கருகம்பனை சீராவலை சவாரித்திடலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றன.  படங்கள் – ஐ.சிவசாந்தன்  , மயூரபிரியன் அனைத்து தொலைக்காட்சி நிகழ்வுகளையும் உங்கள் அலைபேசியில் கண்டுமகிழ இங்கே கிளிக் செய்க

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!