உடனடிச் செய்திகள்

மண்கவ்வியது இந்தியா: தொடரை வென்றது ஆஸி.

இந்திய அணியை 5ஆவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி தொடரை 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியிடம் ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களையிழந்த்து கோலி படை. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடைபெற்ற ரி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்தியாவில் நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலியா ரி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் …

Read More »

வாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வாகன இறக்குமதித் தீர்வை அதிகரிப்பு மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்குப் பின்னர் வங்கி உத்தரவாதப் பத்திரம் வழங்கப்பட்ட வாகனங்களுக்கே நடைமுறைப்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் மார்ச் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வங்கி உத்தரவாதப் பத்திரத்தை வழங்கி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு புதிய இறக்குமதித் தீர்வை அறவிப்படமாட்டாது என நிதி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாடாளுமன்றில் கடந்த 5ஆம் …

Read More »

மன்னார் மேல் நீதிமன்றில் நாளை பகிரங்க ஏலம்

மன்னார் மேல் நீதிமன்றால் அரச உடமை ஆக்கப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத சான்றுப்பொருள்கள் நாளை பகிரங்க ஏலத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் மன்னார் மேல் நீதிமன்ற வளாகத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் என நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்தார். படகுகள், படகு இயந்திரங்கள், அலைபேசிகள் உள்ளிட்ட பொருள்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!