உடனடிச் செய்திகள்

இவர்களையும் கடந்து சென்றோம்: ஓராண்டாகியும் ஏமாற்றமே மிச்சம்

அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2018ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவார் உறுதியளிக்கப்பட்டது. எனினும் தற்போது ஓராண்டு கடந்துவிட்டது. அரசியல்வாதிகளின் உறுதிமொழியால்  ஏமாற்றமடைந்தவர்கள் ஆனந்தசுதாகரின் இரண்டு பிள்ளைகள்தான். கிளிநொச்சியில் 2018ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி நடைபெற்ற தனது மனைவியின் இறுதிச் சடங்குக்காக அரசியல் தண்டனைக் கைதி ஆனந்தசுதாகர் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டார். மனைவிக்கு இறுதிக்கிரியை செய்ய அவருக்கு 3 மணி நேரமே அனுமதி வழங்கப்பட்டது. அதனால் வீட்டில் நடந்த கிரியைகளுடன் அவர் மீள அழைத்துச் செல்லப்பட்டார். …

Read More »

வடக்கின் போரில் விறுவிறுப்பு: ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் இரு அணிகளும்

வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் விளையாடுவதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 14 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களை எடுத்து ஆடிவருகிறது. இதனால் நாளை மூன்றாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் விறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் …

Read More »

மகளிர் தினத்தில் ஜனாதிபதி சட்டவாளர் சாந்தா அபிமன்னசிங்கம் மதிப்பளிப்பு

சட்டத்துறையில் 45 ஆண்டுகள் சாதித்தமை மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மதிப்புப்பெற்ற தமிழ் பெண் சட்டவாளர் என்பவற்றுக்காக சாந்தா அபிமன்னசிங்கம், மகளிர் தினமான இன்று சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தரால் கௌரவிக்கப்பட்டார். ஜனாதிபதி சட்டவாளர் சாந்தா அபிமன்னசிங்கத்துக்கு மல்லாகம் பதில் நீதிவான் திருமதி சிவபாதம் பொன்னாடை அணிவித்து கௌரவமளித்தார். மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது. மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் இந்த மகளிர் தின நிகழ்வை நடத்தினர். இதன்போது யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டவாளர் சாந்த அபிமன்னசிங்கம் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!