உடனடிச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டோருக்கு யாழ்.செயலகத்தில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு , அரச கரும மொழிகள் , சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. அதன் போது மாவட்ட செயலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் மலரஞ்சலி செலுத்தி , மெழுகுவர்த்தியேற்றி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் உயிரிழந்தவர்களின் …

Read More »

அட்சய திருதியை நாளை: வாடிக்கையாளர்களைக் கவர புதிய டிசைன்களில் நகைகள்

அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய டிசைனில் நகைகளைத் தயாரிப்பதில் நகை வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டில் அட்சய திருதியை நாளை செவ்வாய்க்கிழமையாகும். இதை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்புச் சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்துள்ளன. இதேபோல் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கென ஆயிரக்கணக்கில் புதிய டிசைனில் நகைகள் தயாரித்தும் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக யாழ்ப்பாணத்தில் நான்கு தசாப்தங்களாக தங்க நகை வியாபாரத்தில் …

Read More »

சிறிசபாரத்தினத்தின் 33ஆவது நினைவு நாள்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 33வது நினைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறிசபாரட்ணம் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடமான யாழ்ப்பாணம் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (சிறிரெலோ) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து தொலைக்காட்சி நிகழ்வுகளையும் உங்கள் அலைபேசியில் கண்டுமகிழ இங்கே கிளிக் செய்க

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!