உடனடிச் செய்திகள்

“பொன் அணிகள் போர்” மீள ஆரம்பம் – ஏப்ரல் 11இல் ஒருநாள் போட்டி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க பொன் அணிகள் போர் கிரிக்கெட் தொடர் மீளவும் ஆரம்பிக்கப்படுகிறது. இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் 4 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் ராஜன் – கதிகாமர் வெற்றிக்கிண்ணத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் போட்டியை வரும் ஏப்ரல் 11ஆம் திகதி நடத்தப்படவுள்ளது என்று யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையே 97 ஆண்டுகளாக பொன் அணிகள் போர் கிரிகெட் …

Read More »

கிளிநொச்சி மாணவிகள் இருவர் றோல் போல் போட்டியில் சாதித்தனர்

கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த மாணவிகள் இருவர் இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண றோல் போல் போட்டியில் விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா, நடராசா வினுசா ஆகிய இருவரும் தேசிய றோல் போல் அணியில் விளையாடி சாதித்துள்ளனர். ஆசியக் கிண்ண றோல் போல் போட்டிகள் பெப்ரவரி 21ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதிவரை இந்தியாவில் இடம்பெற்றன. அதில் இலங்கை அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் விளையாடிய உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா, நடராசா வினுசா மாணவிகள் …

Read More »

கோலி சதமடித்தும் இந்திய அணி ஆஸியிடம் வீழ்ந்தது

ஆஸ்திரேலியாவுடனான 3ஆவது ஒருநாள் போட்டியில் கோலி சதமடித்தும் இந்திய அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கவாயா 104 ஓட்டங்களையும் அணித்தலைவர் பின்ஷ் 93 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 31.5 ஓவர்களில் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!