உடனடிச் செய்திகள்

நல்லூரானின் கார்த்திகைத் திருவிழா சிறப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழ நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கார்த்திகைத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்புற நடைபெற்றது. நல்லூர் ஆலய வருடாந்தத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 18ஆம் நாளான இன்று முருகப் பெருமானுடைய அவதார நட்சத்திரமான கார்த்திகை நாளில் பகல் திருவிழா நல்லூரான் செவ்வந்திப் பூ அலங்காரத்துடன் அடியவர்களுக்கு காட்சியளித்தார். மாலை சிறப்புத் திருவிழாவாக வள்ளி, தெய்வாணை சமேதராய் முத்துக்குமார சுவாமி வெளிவீதியுலா வந்து காட்சியளித்தார். இதேவேளை, 19ஆம் திருவிழாவான நாளை காலை 6.30 மணிக்கு சூரிய உற்சவம் இடம்பெறுகிறது. படங்கள்- …

Read More »

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்- பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

“தமிழகம், கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று கோவை மாநகர பொலிஸ் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். அதே போல தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர பொலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீவிரவாத அச்சுறுத்தல் வந்தது உண்மைதான் என்றும், நேற்று இரவில் இருந்து …

Read More »

நல்லூரானுக்கு செவ்வந்திப் பூ அலங்காரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவில் இன்றைய கார்த்திகைத் திருவிழாவில் வேலவன் செவ்வந்திப் பூ ஆலங்காரத்துடன் காட்சியளித்தார். இன்றைய 18ஆம் திருவிழாவின் பகல் உற்சவத்தில் வேலவன் உள் வீதியுலா வந்தார். மலையகத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ஆயிரக் கணக்கான செவ்வந்திப் பூக்கள் கொண்டு நல்லூரான் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இன்றைய மாலை உற்சவத்தில் முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரங்களுடன் வெளி வீதியுலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள்! ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா?

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!