அசாஞ்சே சிறையிலேயே இறக்கலாம் – தந்தை கவலை

எனது மகன் சிறையிலேயே இறக்கலாம் என்று விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவின் தந்தை தெரிவித்துள்ளார்.

அசாஞ்சேவின் தந்தை ஜான் ஷிப்டன் இரு நாட்களுக்கு முன்னர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் சிறையில் சந்தித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து ஜான் ஷிப்டன் ஜெனிவாவில் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ‘அமெரிக்காவின் போர் குற்றங்களை வெளியிட்டதற்காக எனது மகன் அசாஞ்சே 9 வருடத் துன்புறுத்தலுக்குப் பிறகு சிறையில் இறக்க நேரிடலாம். நான் இந்த உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இது உண்மை’ என்று தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா தொடர்பான பல தரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்களை, பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்தது.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இ-மெயில் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதன் பின்னணியில் ஜூலியன் அசாஞ்சே இருந்ததாக அமெரிக்கா அவர் மீது குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து அசாஞ்சேவுக்கு இணைய வசதி மறுக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து 47 வயதான ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் ஏப்ரல் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு இருந்த நிலையில் அவரை லண்டன் பொலிஸார் கைது செய்தனர். ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

- Advertisement -
- Advertisement -

Must Read

மேலும் 2 கோவிட் -19 நோயாளிகள் சாவு

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சனிக்கிழமை (நவ.28) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால்...
- Advertisement -

நாட்டில் இன்று 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறிவு

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 213 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இன்று மட்டும் 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. கலைப்பீட மோதல் – குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால்...

மேலும் 274 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 274 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கோவிட் -19 நோய் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான...

Related News

தனி மனிதனின் சமூகப் பொறுப்பற்ற செயலால் பலர் பாதிப்பு; வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

"கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!