Tuesday, December 5, 2023
Homeஉள்ளூர் செய்திகள்அடம்பன் விபத்தில் இளைஞன் பரிதாபச் சாவு

அடம்பன் விபத்தில் இளைஞன் பரிதாபச் சாவு

மன்னார் அடம்பன் – உயிலங்குளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அடம்பன் புளியங்குளத்தை சேர்ந்த தமிழரசன் பிரசாந்த் (வயது -30) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தனர். குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின.

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏனைய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மன்னார் பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular