அடுத்த வாரம் முதல் 3 நாள்கள் பாடசாலை

எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்வது குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

அன்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வாரத்தில் 3 நாட்கள் பாடசாலைகள் நடைபெறும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறும்.

புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இணையவழி கற்றல் செயல்முறைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.