அடுத்த 03 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் – என்னை நம்புங்கள் என ஜனாதிபதி வலியுறுத்து

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

எனவே தன் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

குறுகிய விமர்சனங்களை முன்வைத்து மக்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்றும் கோத்தபாய ராஜபக்ச அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மீரிகம தொடக்கம் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் பகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெரும் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதாகவும், தடுப்பூசி மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் நாடு முன்னேற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயியை தாம் ஒருபோதும் மறக்கமாட்டோம் என உறுதியளித்த ஜனாதிபதி, விரைவில் பயிர்ச்செய்கை போர் ஒன்று ஆரம்பிக்கப்படும் எனவும் வலியுறுத்தினார்.