அட்சய திருதியை நாள் தங்க நகை வியாபாரம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பு

அட்சய திருதியைத் திருநாளில் யாழ்ப்பாணம் நகரம் கோலகலமானது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் தங்கத்தின் விலையில் பெருமளவில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக வழமையைவிட இன்றைய நாளில் தங்கம் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

அட்சய’ என்பதற்கு அழியாது பெருகக்கூடியது என்பது பொருளாகும். சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் திரிதியை நாளை ‘அட்சய திரிதியை’ நாளாக கொண்டாடுகிறோம்.

பெரும்பாலும் அட்சய திரிதியை நாளன்று மக்கள் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். ஆபரணங்கள் மீதான பிரியம் காலாகாலத்துக்கும் நம்மைவிட்டு அகலாது.

யாழ்ப்பாணம் நகரில் நகை மாளிகைகள் சோடனை அலங்காரம் செய்யப்பட்டுக் காணப்பட்டன. சிறி நதியா நகை மாளிகை மற்றும் என்எஸ்ஆர் ஜூவல்லரியில் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் இம்முறையும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

அத்துடன் ஆயிரக்கணக்கான புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்படிருந்தன. இன்று இரவுவரை வியாபார நடவடிக்கைகள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

படங்கள் ஐ.சிவசாந்தன்