அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனம்

இலங்கை அதிபர்கள் சேவை – ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவை மூடப்பட்ட சேவைகளாக கல்வி அமைச்சின் செயலாளரினால் அதிசிறப்பு அரசிதழ் அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது.

இந்தப் பிரகடனம் 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வுகள், நியமனங்கள், ஒழுக்காற்று இடமாற்றங்கள் மற்றும் ஏனைய நிறுவன விடயங்கள் தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள் தற்சமயம் அந்தந்த சேவைகளுக்கு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என தொடர்புடைய அரசிதழ் அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு சேவைக்கும் தனித்துவமான குறிப்பிட்ட சம்பள அமைப்புகளை விசாரித்து அதற்கேற்ப திருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.