அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச துறை ஊழியர்களுக்கு 2 வாரங்கள் வீட்டிலிருந்து வேலை

வரும் திங்கட்கிழமை முதல் 2 வாரங்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை

எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 20) தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

இந்த சுற்றறிக்கை அத்தியாவசிய சேவைகளை கட்டுப்படுத்ததாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடைமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கையை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித் துறை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழு சுற்றறிக்கையை வெளியிடவுள்ளது.