அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் லொறிகளுக்கு எரிபொருள் வழங்க சிறப்பு ஏற்பாடு

அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்திகளுக்கு எரிபொருள் வழங்கும் சிறப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், நாடுமுழுவதும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய பொருள்கள் பாரவூர்திகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படும்.

மருந்துகள், எரிவாயு, காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கே இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.