அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கோரோனா தொற்று

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் கோவிட் -19 க்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதி ட்ரம்ப் தனது கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் நெருங்கிய உதவியாளர் கோரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானதைக் கண்டறிந்த பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் நேற்று பிசிஆர் பரிசோதனை செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அவர்கள் இருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.