அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த மாதத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வடைந்தது. ஆனால் 5 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இன்னும் வலுவாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிவித்தலின் பிரகாரம் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 323 ரூபா 69 சதமாகவும் விற்பனை பெறுமதி 337 ரூபா 17 சதமாகவும் உள்ளது.


