உள்ளூராட்சி சபைகளில் சுய இலாப அரசியல் நகர்வுகளை நிறுத்துவார்களா கஜேந்திரகுமார் அணியினர்?

– யாழவன் –

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளிலே மிக மிக வினோதமான கொள்கைகளோடு பயணிக்கிறார்கள் கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர்.

தங்கள் அணியின் உறுப்பினர்களிடம், சபைகளிலே பாதீடுகள் சமர்ப்பிக்க முதலே பாதீடுகளை எதிர்க்கும் முடிவை எடுக்கும்படியும், அதற்கு சம்மதித்து கையெழுத்து வைக்கும் படியும் கேட்கப்படுகிறார்கள்.

ஒரு பாதீடு எதிர்க்கப்படுவது என்பது அதில் சொல்லப்பட்ட வருமானம் செலவீனம் பற்றிய பகுப்பாய்வின் அடிப்படையில்தான் எடுக்கப்பட வேண்டும். இதுதான் நியாயம். இதுதான் அறம் .

ஆனால் பாதீடு சமர்ப்பிக்க முதலே எதிர்க்கும் முடிவை இவர்கள் எடுக்கிறார்கள். இந்த முடிவு வெறும் அரசியல் பழிவாங்கல்களாக மட்டும் நோக்க முடியாது. இதன் பின்னணியில் “சபைகளை நேரிடையாக தேசிய அரசியலிடம்” கையளிக்கும் சூட்சுமமும் இருக்குமா? என்கிற சந்தேகம் எழுகிறது.

” உள்ளூராட்சி சபைகள் ” தேச கொள்கைக்கு விரோதமானவை என்று கூறி, அந்த தேர்தல்களில் பங்குபற்றாமல் இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர், பின்னர் பங்குபற்ற வேண்டும் என்கிற முடிவை நோக்கி நகர்ந்தமைக்கு காரணம்” தவறானவர்கள் கையில் சபைகள் போய் விடக்கூடாது” என்பதேயாகும்.

ஆனால் பாதீடுகளை பார்க்கலாமலேயே எதிர்க்கும் முடிவுகளை இவர்கள் எடுப்பதன் விளைவு என்னவாக இருக்கும் என்று இவர்கள் அறியாததா என்ன?

கூட்டமைப்பு ஆட்சி அமைத்த சபைகளின் பாதீடுகளை இவர்கள் எதிர்ப்பதன் மூலம், தாங்கள் ஆட்சியை கைப்பற்றி நல்ல சேவைகள் செய்வதாக இருந்தால், பாதீட்டை பார்க்காமலே இவர்கள் எதிர்க்கும் முடிவை எடுப்பதை வரவேற்கலாம்.

ஆனால் இவர்களுக்கு அந்த நோக்கம் இல்லை. ஏனெனில் இவர்கள் எதிர்த்து ஆட்சி கவிழ்ந்த சபைகளான யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றில் இவர்கள் தாங்கள் ஆட்சி அமைக்க முற்பட்டிருக்கவில்லை. மாறாக யாழ்ப்பாணம் மாநகர ஆட்சி அமைக்கும் வாக்களிப்பில் பங்குபற்றாமலேயே இருந்தார்கள் .

ஆட்சியை கைப்பற்றி சிறந்த சேவை செய்வோம் என்கிற நோக்கமும் இல்லை, ஆட்சி அமைக்க முற்படும் சபைகளில் ஒப்பீட்டளவில் சிறந்த தெரிவாக இருக்கும் அணிக்கு வாக்களிக்கும் நோக்கமும் இல்லை. அப்போ இவர்களின் நோக்கம்தான் என்ன?

ஆட்சியைக் கவிழ்த்து, அதை அப்படியே ஆணையாளர் கைக்கு கொண்டு போக வைப்பதா? இவர்கள் நோக்கம் என்று அரசியல் அவதானிகள் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இவர்கள் செயல்பாடுகளை பார்க்கும் பொழுது இதை இல்லை என்று முழுமையாக மறுத்துவிட முடியாது என்று எண்ணவே தோன்றுகிறது.

ஆனல்ட் தலைமையிலான பாதீட்டை தோற்கடித்தார்கள். ஆனல்ட் நின்றால் எதிர்ப்போம் என்றார்கள் . ஆனால் ஆனல்ட்டே நின்றதால் நடுநிலமை வகித்தார்கள்.

இவர்கள் நடுநிலமை வகித்ததுக்கு காரணம் தங்கள் கட்சியின் மாற்றுக் குழு ஒருவர் போட்டியிட்டதேயாகும் . இந்த நடுநிலமை வகிக்கும் முடிவை இவர்கள் எடுக்கும் பொழுது என்ன அடிப்படையில் எடுக்கிறார்கள் என்பதையே இங்கே கேள்வியாக எழுப்ப விரும்புகிறேன். ஆக ஒரு கட்சி சார்ந்து, கட்சியின் நன்மை தீமை சார்ந்துதான் இவர்கள் முடிவை எடுக்கிறார்களே தவிர மக்கள் நலன் சார்ந்து அல்ல.

ஏனெனில் நடு நிலமை வகிக்கும் பொழுதே முடிவு இவர்களுக்கு தெரிந்ததே. ஈபிடிபி கட்சியினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை ஆதரிக்கத் தொடங்கிய பொழுதே தாங்கள் எடுத்த நடுநிலமை என்ன முடிவைத் தரும் என்று உணர்ந்தே இருப்பார்கள். அதாவது மணிவண்ணன் வெற்றி பெறுவார் என்பது அவர்கள் அறிந்திருந்ததே.

அவ்வாறிருந்தும், நடுநிலமை எடுத்த மூவரில் இருவர் வேறு முடிவை எடுத்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் வருவதை தடுத்திருந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யாமலேயே விட்டிருந்தார்கள்.

இப்போ விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர். அவர் முதல்வரானதுக்கு ஈபிடிபியின் வாக்குக்கள் எவ்வளவுக்கு உதவியதோ, அதே அளவுக்கு இவர்கள் எடுத்த வாக்களிக்காமல் விடுதல் என்கிற முடிவும் உதவியது என்பதே உண்மை ஆகும்.

அந்த இடத்தில் ஒப்பீட்டளவில் மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய தெரிவை நோக்கி நகர கூடிய முடிவை எடுக்கத் தெரியாத அவர்கள் தற்பொழுது ” விஸ்வலிங்கம் மணிவண்ணன் ” ஈபிடிபியோடு ஆட்சி செய்கிறார் என்று பரப்புரை செய்வதோடு மட்டுமல்லாது, விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாக்கல் செய்ய இருக்கும் பாதீட்டை தோற்கடிக்கவும் திட்டம் தீட்டிவருவதாகவும் அறியக்கூடியதாக இருக்கிறது.

நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், முன்னணியின் கஜேந்திரகுமார் அணியினை சேர்ந்த யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கிருபா, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் பாதீட்டை கவிழ்ப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறார்.

இது உண்மையாக இருந்தால் கடைந்தெடுத்த அயோக்கியதனம் ஆகும் .

சரி, விஸ்வலிங்கம் மணிவண்ணன் சரி இல்லை பிழையானவர் என்று கருதி இருந்தால் அன்று அவர் முதல்வராகத் தெரிவாவதைத் தடுக்கக் கூடிய சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்தவில்லை?

விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஆனல்ட் இவருமே பிழையானவர்கள் என்பதாலா? அவ்வாறு இருந்தால் ஏன் ஆட்சியை கைப்பற்ற கஜேந்திரகுமார் அணியினர் முனையவில்லை?

சொந்த கோபதாபங்களுக்காக, எங்கள் மக்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை மத்தியிடம் கொண்டு போய் சேர்க்க முனைகிறாரா ஜிஜியின் பேரன்?

அன்று தந்தை செல்வா மேல் இருந்த கோபத்தில், மலையக மக்களின் குடியுரிமை பறிக்க துணை போன அரசில் அமைச்சராக இருந்த ஜிஜி போல பேரனும் இன நலன்களை புறந்தள்ளி செய்லபடுகிறாரா?

அடுத்துவரும் யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வுகள் இவற்றுக்கான விடைகளை எமக்கு தந்து செல்லும்.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....
- Advertisement -

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...

Related News

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...

மன்னாரில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் ஜனாஸா நாளை வவுனியாவில் தகனம்

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலத்தை அரச செலவில் வவுனியா நகர சபையால் பராமரிக்கப்படும் மின் தகன...
- Advertisement -
error: Alert: Content is protected !!