“அரசியல்வாதிகளும், அரச ஊழியர்களும் நாட்டுக்கு சுமை என்பது சமூகத்தில் பிரபலமான நம்பிக்கையாகிவிட்டது”

அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமை என்பதே சமூகத்தின் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதென ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

திஹாகொட பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு அனைத்து அரச ஊழியர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

அரச நிர்வாகத்தில் நேர்மையாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய பொறுப்பு குறித்தும் டலஸ் அழகப்பெரும கருத்துத் தெரிவித்தார்.