அரசு ஊழியர்களை சுழற்சிமுறையில் கடமைக்கு அழைப்பதற்கான நடைமுறை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பு

நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தி பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இன்று முதல் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சுச் செயலாளர்கள் – மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் விதிகள், அத்தியாவசிய பொது சேவைகளை பராமரிக்க தேவையான பணியாளர்களை இணையவழியில் செய்ய முடியாத கடமைகளுக்கு அழைப்பதை தடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.