அரச துறை ஊழியர்களின் ஜனவரி மாதத்திற்கான சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் நாளைமறுதினம் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
அரச துறையில் நிர்வாக நிலை ஊழியர்களுக்கு ஜனவரி 25 அல்லது 26 ஆம் திகதி சம்பளம் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சம்பளம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிருந்தது.