அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் நடைமுறை தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏற்படப் போகும் உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரச ஊழியர்களது வீடுகளில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களை ஊக்குவிப்பதற்கும் குறித்த அரச நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதித்துறை நடவடிக்கைகள் தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றறிக்கை வருமாறு;