அரச, தனியார் துறைகளின் ஒன்றிணைந்த வேலைநிறுத்தம் நிறைவு

காலிமுகத்திடல் ‘கோத்தா கோ கம’ போராட்டகாரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பை முடித்துக் கொண்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் பிரதிநிதி ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று மாலை நிறைவடைந்துள்ளது.

அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்களுக்கு மக்கள் உரிய தண்டனை வழங்கியுள்ள நிலையில், நாட்டில் மேலும் வன்முறைகள் இடம்பெறுவதை நிறுத்த வேண்டும் என்பதே தமது கருத்தாகும் என்று தொழிற்ச

இதன்படி நாளை காலை 7 மணி முதல் பொது சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.