அரச துறை உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளை ஆராய ஆணைக்குழு நியமனம்

0

அரச துறை உத்தியோகத்தர்களின் சம்பளக் கட்டமைப்புகளிலுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான சிறப்பு ஆணைக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

15 பேர் கொண்ட இந்த ஆணைக்குழுவில் பொறியியலாளர் பி.தங்கமயில் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவார்.

இது தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச துறையில் தற்போது காணப்படும் சம்பளக் கட் டமைப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், ஒட்டுமொத்த அரச சேவையிலும் அரச கூடடுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரச கம்பனிகளதும் பணித் தொகுதிகளிலான பல்வேறு சேவைகளின் பணிப் பொறுப்பு மற்றும் பொறுப்புகள் தொடர்பாக முறைசார் மதிப்பீட்டின் மூலம் ஒவ்வொரு சேவைகளது சம்பள முரண்பாடுகளைக் குறைப்பதற்கும்,

உழைப்புச் சந்தையினூடாக தகைமைகளைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களை ஆள்சேர்ப்புச் செய்வதற்கும் ஏற்றவகையில் சம்பள முரண்பாடுகளற்ற உயர்மட்டச் சம்பளக் கட்டமைப்பினை அரச துறைக்கு வழங்குவதற்குத் தேவையான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிறப்பு ஆணைக்குழு நியமிக்கப்படுகிறது.

ஆணைக்குழுவின் தலைவராக பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் எஸ். ரானுக்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

கே.எல்.எஸ். விஜயரத்ன, ரி.பி.கொல்லுரே, சி.பி.சிறிவர்த்தன, திருமதி சுதர்மா கருணாரத்ன, ஜனக சுகததாச, திருமதி தாரணி எஸ்.விஜயதிலக, லலித் ஆர்.டி.சில்வா, ஜி.எஸ்.எதிரிசிங்க, ஏ.ஆர். தேசப்பிரிய, திருமதி பீ.பி.பி.எஸ்.அபேகுணரத்ன, மருத்துவர் பாலித்த அபயகோன், பொறியியலாளர் பி.தங்கமயில், எஸ்.டி.ஜயகொடி, எஸ்.சி.விக்ரமசேகர ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச சேவையின் சம்பளங்கள் மற்றும் படிகள் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள சம்பள சுற்றறிக்கைகள் ஏற்பாடுகள் மீது கவனம் செலுத்தி, இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவச் சேவைக்கு உததேசிக்கப்பட்டுள்ள சம்பள அளவுத் திட்டத்தை வழங்கும் போது ஏற்படும் அழுத்தங்களை ஆராய்தலும் அதன் மூலம் எழும் பிரச்சினைகளைத் தீர்பதற்கான திறமுறைகளை முன்மொழிதலும்.

அண்மையில் சம்பளங்கள் மற்றும் படிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட் ட புகையிரத சேவை, சுகாதாரம், உயர்கல்வி மற்றும் கல்வி, தபால் சேவை ஆகிய துறைகளுக்காகத் தற்போது நடைமுறையிலுள்ள சம்பளச் சுற்றறிக்கைகளின்மூலம் முரண்பாடுகள் ஏதும் ஏற்பட்டிருப்பின் அதனைக் குறைப்பதற்காகத் தீர்வுகளை முனமொழிதல்.

நாடுமுழுவதுமுள்ள அரச சேவைகளுக்குரிய சம்பளப் பிரச்சினைகள் போன்று மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புகள் காரணமாகத தற்போது எழுந்துள்ளதாக அடையாளம் காணப்பட் டுள்ள சம்பள முரண்பாடுகளைக் குறைப்பதற்கு உரிய பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்.

சமமான பொறுப்புக்கள் வகிக்கும் அல்லது அதையொத்த தகைமைகளுடன் கூடிய தொழில் புரிபவர்களினால் அரச மறறும் பகுதி அரச துறைகளில் பெறப்படும் சம்பளங்கள் மற்றும் படிகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளைக் குறைபபதற்காக வழிகாட்டும் சம்பளங்கள், படிகள் பற்றிய கட்டமைவுகள் தொடர்பில் பரிந்துரைகளைச் சமர்ப்பிப் பதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிக்கின்றேன்.

இந்த ஆணைக்குழு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 2 மாதங்களுக்குள் சம்பள மீளாய்வை முன்னெடுக்கும் – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here