அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (பெப்ரவரி 8) 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் நாளை காலை 8 மணிக்கு அடையாள வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
இன்று காலை நடைபெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சிறுவர் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தடையின்றி தொடரும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு அண்மைய வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தத்தை அரசு திரும்பப் பெறக் கோரி பல சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை, வங்கி ஊழியர்களும் நாளை அரைநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதனால் வங்கி சேவைகள் நண்பகலுடன் இடைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.