யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது-26) மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த கீதாரட்ணம் திவ்யா (வயது-31) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
காரில் பயணித்த வடமராட்சி புலோலியை சேர்ந்தவர்களான சிவசுப்பிரமணியம் சுதாகரன் மற்றும் கருணாமூர்த்தி விமலாதேவி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

