ஆசிரியர்கள்- அதிபர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க கல்வி அமைச்சுக்கு அவசர தேவையில்லை

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள முரண்பாடுகளின் பிரச்சினையைத் தீர்க்க கல்வி அமைச்சுக்கு அவசர தேவை இல்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சாட்டுகிறது.

நேற்றைய ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க இதனைக் கூறினார்.

- Advertisement -

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கல்வி அமைச்சு மாணவர்களின் கல்வியை மீட்பதற்கு குறிப்பிடத்தக்க ஈடுபாட்டைக் காட்டவேண்டும் என்றாலும், அத்தகைய நிலை இதுவரை காணப்படவில்லை.

சம்பள முரண்பாடுகளை நீக்க அரசுக்கு வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தொடங்கிய தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் 92வது நாள் இன்று (நேற்று). பல சந்தர்ப்பங்களில் அரசுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

இத்தகைய பின்னணியில்தான் இன்று (நேற்று) காலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெறவிருந்தது.

எவ்வாறாயினும், கலந்துரையாடலை ஒத்திவைக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் அலுவலகம் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு அறிவித்திருந்தது.

பிரதமருடனான கலந்துரையாடல் ஒத்திவைக்கப்படுவதற்கு, கல்வி அமைச்சின் தலையீடு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது- என்றார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!