ஆட்டிப் படைக்கும் ஆளுமை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த நாள் இன்று.

2017ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி இது.

“பிரபாகரனிடம்தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிரபாகரன் உருவாகியதால்தான், பீல்ட் மார்ஷல் ஒருவரும் உருவானார்” என்று அவர் கூறியிருந்தார்.

2011ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய, நோர்வேயின், இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜூம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சிறந்த போரியல் வல்லுனர் – இராணுவ மேதை என்று குறிப்பிட்டிருந்தனர்.


ஆனாலும், பிரபாகரனின் அரசியல், இராஜதந்திர ஆளுமையை அவர்கள் அந்தளவுக்கு சிறப்பாக மதிப்பிட்டிருக்கவில்லை.

எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின், போரியல் ஆளுமை என்பது, எவராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே- இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒன்றும் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டுவதற்காக, நாடாளுமன்றத்தில் அந்தக் கருத்தைக் கூறியிருக்கவில்லை. அது பிரபாகரனின் போரியல் ஆளுமையை வெளிப்படுத்தும், அங்கீகரிக்கும் கருத்து என்பதில் சந்தேகமில்லை.

இன்று இலங்கையின் முப்படைகளும் அதிநவீன ஆயுதங்கள், போர்த்தளபாடங்களுடன் இருக்கின்றன என்றால், மூன்று இலட்சம் படையினரைக் கொண்டதாக விளங்குகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் பிரபாகரன்தான்.

அதனால்தான், பிரபாகரனிடம்தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்சேகா அன்று கூறியிருந்தார்.

போர் தொடங்கிய போது, வெறும் 10 ஆயிரம் படையினரே இலங்கையில் இருந்தனர். அப்போது எந்த நவீன போர்த் தளபாடங்களும் படையினரிடம் கிடையாது. போருக்கான ஆயத்தநிலையும் இல்லை.

இருந்தாலும், மரபுசார் பயிற்சிகளைப் பெற்ற ஒரு இராணுவம் இருந்தது. அதனை எதிர்கொண்டுதான் பிரபாகரன் தனது போர் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

பிரபாகரன் எங்கும் போர்க்கலையைக் கற்கவில்லை எந்த நாட்டிடமும் பயிற்சிகளைப் பெறவில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே, பிரபாகரனிடம்தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அளவுக்கு அவரது போர் ஆளுமை அமைந்திருந்தது.

இலங்கை இராணுவம் இப்போது, உலகில் கவனிக்கத்தக்க ஒரு இராணுவமாக இருக்கிறது என்றால்- இலங்கை இராணுவத்திடம் போர் அனுபவங்களையும் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள பல நாடுகள் முற்படுகிறது என்றால், அதற்கு ஒரே காரணம், பிரபாகரனின் போர் ஆளுமை மட்டும்தான்.

அந்த ஆளுமையைத் தோற்கடித்த ஒரே காரணத்தினால்தான், இலங்கை இராணுவத்துக்கு இந்த மதிப்பும் கிடைத்தது.

வெளியுலக ஆதரவு இல்லாமல் ஒரு படைக்கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அதனைக் கட்டியெழுப்பியிருந்தார் பிரபாகரன்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படையினர் தான் இருந்தனர். இப்போதுள்ள 3 இலட்சம் படையினர் இருந்திருந்தால், இரண்டு ஆண்டுகளில் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருப்போம் என்று கூறியிருக்கிறார்.

இலங்கை இராணுவத்துடன் போரைத் தொடங்கிய போது, விடுதலைப் புலிகளும் ஒன்றும் ஆயிரக்கணக்கான போராளிகளையோ, மிகப்பெரிய ஆயுத தளபாடங்களையோ, நவீன போர்க்கருவிகளையோ, சண்டைப் படகுகள், விமானங்களையோ கொண்டிருக்கவில்லை.

ஐந்து பத்து பேரில் இருந்துதான், இராணுவத்துக்கு எதிரான போர் புலிகளால் தொடங்கப்பட்டது. குறைந்தளவு போராளிகளே இருந்தாலும், இராணுவத்தின் செறிவு குறைவாக இருந்தமை, புலிகளுக்குச் சாதகமாக இருந்திருக்கலாம்.

அதனால்தான், இப்போதுள்ள படைபலம் இருந்திருந்தால் இரண்டு ஆண்டுகளில் போரை முடித்திருக்கலாம் என்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

எனினும், படைபலம் மாத்திரமே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகொள்வதற்கு சாதகமான அம்சமாக இருந்தது என்ற கருத்து ஏற்புடையதல்ல. மூன்றாவது கட்ட ஈழப்போரில் கூட, இரண்டு லட்சம் படையினருடன்தான் அரசு இருந்தது.

ஆனாலும் புலிகளை அப்போது தோற்கடிப்பதற்கான சூழலும், உத்திகளும் வாய்க்கவில்லை.

பிரபாகரனிடம் இருந்து போரிடும் முறைகளை மாத்திரம் இராணுவம் கற்றுக் கொள்ளவில்லை. பல ஆயுதங்களின் அறிமுகமும் கூட இராணுவத்துக்கு புலிகளால்தான் கிடைத்திருந்தது.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி, அச்சுவேலியில் புலிகளின் முகாம் ஒன்றை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். அது ஒரு ஆயுத களஞ்சியமாகவும் விளங்கியது. அங்கிருந்துதான், ஆர்பிஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்முதலாக இராணுவத்தின் கையில் கிடைத்தது.

அதற்குப் பின்னர் அதே ஆர்பிஜிகளை பெருமளவில் இராணுவம் வாங்கிக் குவித்தது. அதுபோலப் பல ஆயுத தளபாடங்களை விடுதலைப் புலிகள் போரில் அறிமுகப்படுத்திய பின்னரே, இராணுவத்தினர் அதனை வாங்க முயன்றனர்.

சாம் எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் விடுதலைப் புலிகளுக்குப் பின்னர்தான் விமானப்படை வாங்கியது. பல்குழல் பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள்தான் முதன் முதலில் இலங்கையில் பயன்படுத்தத் தொடங்கினர்.

1999ஆம் ஆண்டு தொடக்கத்தில் தள்ளாடி படைத்தளம் மீதான தாக்குதலில் புலிகள் 12 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கியை பயன்படுத்தியிருந்தனர்.

2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் புலிகள் நுழைந்த போதுதான் இராணுவம் பல்குழல் பீரங்கிகளை வாங்கியது.

இப்படி போரில் பல ஆயுதங்களை இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியவரே பிரபாகரன்தான்.

ஆயுத தளபாடங்களை மாத்திரமன்றி, பல போர் உத்திகளையும் பிரபாகரனிடம் இருந்தே, இலங்கை இராணுவம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த- நான்காவது கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவம் பயன்படுத்திய பெரும்பாலான உத்திகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கற்றுக் கொண்டவைதான்.

பின்தளப் பகுதி வரை ஊடுருவிச் சென்று நிலையெடுத்த பின்னர் தாக்குதல்களைத் தொடுப்பது, சிறிய கெரில்லா அணிகளாக இராணுவத்தைப் பிரித்து சண்டையில் ஈடுபடுத்தியது என்பன அதில் முக்கியமானவை.

பரந்துபட்ட பிரதேசத்தில் கிட்டத்தட்ட கொரில்லா பாணியிலான ஒரு அரங்கையும், மரபுவழியிலான ஒரு அரங்கையும் சமநேரத்தில் திறந்து விட்டிருந்தது இராணுவம். பிரபாகரனின் கெரில்லா போர் உத்திகளையே இங்கு இராணுவம் பயன்படுத்தியது.

அதனை எதிர்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் சிரமப்பட்டார்கள். அது தனியே போர் உத்தியுடன் தொடர்புடைய பிரச்சினையாக மாத்திரம் இருக்கவில்லை.

இராணுவத்திடம் கிடைத்திருந்த நவீன கண்காணிப்பு வசதிகள், ஆயுத விநியோகங்கள் முடக்கப்பட்டமை, மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி, இராணுவத்தின் ஆட்பலப் பெருக்கம் போன்ற, இராணுவத்தின் உத்திக்கு எதிரான வியூகங்களை வகுப்பதற்குப் புலிகளுக்குப் போதிய அவகாசத்தைக் கொடுத்திருக்கவில்லை.

அது புலிகளின் தோல்விக்குக் காரணமாகியது.

எவ்வாறாயினும், போர் முடிந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பிரபாகரனிடம்தான் போரைக் கற்றுக்கொண்டோம் என்ற உண்மையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பிரபாகரன் என்ற இராணுவ ஆளுமை இல்லாமல் போயிருந்தால் இலங்கை வரலாற்றில் ஒரு பீல்ட் மார்ஷலோ, சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா போன்ற பல நட்சத்திர நிலைத் தளபதிகளோ உருவாகியிருக்க முடியாது.

குறைந்த ஆளணிப் பலத்தையும், மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத பலத்தையும் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இராணுவத்துக்கே, போரைக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு பிரபாகரன் இராணுவ மேதையாக விளங்கியிருந்தார்.

இராணுவத்திடம் இருந்தே போர் நுணுக்கங்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான வியூகங்களை அவர் வகுத்தார். இராணுவத்தின் போர் நுட்பங்களையும், மூலோபாயத் திட்டங்களையும் முன்னுணர்ந்து செயற்படக் கூடிய ஆற்றல் பிரபாகரனுக்கு இருந்தது.

அதுவே, போரின் கடைசி நாள் வரை பிரபாகரனுக்காக மூன்று இலட்சம் படையினரும், அரசியல், இராணுவத் தலைமைகளும் தலையைப் பிய்த்துக் கொண்டு அலையும் நிலையை ஏற்படுத்தியது.

“பிரபாகரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 2016ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்ட நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்ட 45 நிமிட போரில் 53வது டிவிசனுக்கு மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவே தலைமை தாங்கினார். 30 ஆண்டுகால போர் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக மேஜர் ஜெனரல் குணரத்னவால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்கின்ற நூலில் இந்த மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

டெய்லி பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்திற்கு மேஜர் ஜெனரல் குணரத்ன வழங்கிய நேர்காணலில் “தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவரும், ஒழுக்கமுள்ள தலைவருமான பிரபாகரன் போன்ற ஒருவர் உருவாகும் போது மட்டுமே புலிகள் அமைப்பானது மீளவும் செயற்பட முடியும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்திருந்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நாளை மேல் மாகாணத்திலுள்ள 6 வைத்தியசாலைகளில் ஆரம்பம்

இந்திய அரசு வழங்கிய கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதி இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயினால் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய...
- Advertisement -

கலாசார சீரழிவில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட்ட நால்வரும் விளக்கமறியலில் – மல்லாகம் நீதிமன்றின் உத்தரவில்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்...

நயினாதீவு ஆலய அறநெறி மாணவர்களுக்கு இசைக்கருவிகளை வழங்கிவைத்தது இந்தியா

நயினாதீவு ஆலயத்தில் அறநெறி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தாயாவினால் இசைக் கருவிகள் ஆலய நிர்வாகத்திடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன.  தைபூச நன்னாளில் (ஜனவரி 28, 2021), இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரன் இலங்கை ரூபாய் 2 லட்சம்...

கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றிய இந்திய விமானம் கட்டுநாயக்கவில் வந்திறங்கியது

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏஐ-281 இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் ஒக்ஸ்போர்ட் கோல்ஷூல்ட் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இன்று முற்பகல் 11.35 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...

Related News

கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நாளை மேல் மாகாணத்திலுள்ள 6 வைத்தியசாலைகளில் ஆரம்பம்

இந்திய அரசு வழங்கிய கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதி இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயினால் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய...

கலாசார சீரழிவில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட்ட நால்வரும் விளக்கமறியலில் – மல்லாகம் நீதிமன்றின் உத்தரவில்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்...

நயினாதீவு ஆலய அறநெறி மாணவர்களுக்கு இசைக்கருவிகளை வழங்கிவைத்தது இந்தியா

நயினாதீவு ஆலயத்தில் அறநெறி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தாயாவினால் இசைக் கருவிகள் ஆலய நிர்வாகத்திடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன.  தைபூச நன்னாளில் (ஜனவரி 28, 2021), இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரன் இலங்கை ரூபாய் 2 லட்சம்...

கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றிய இந்திய விமானம் கட்டுநாயக்கவில் வந்திறங்கியது

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏஐ-281 இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் ஒக்ஸ்போர்ட் கோல்ஷூல்ட் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இன்று முற்பகல் 11.35 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...

பெப். 4இல் கிளிநொச்சியில் கறுப்பட்டிப் போராட்டம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டம் ஒன்றை வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 6ஆம் திகதி வரை நடத்த...
- Advertisement -
error: Alert: Content is protected !!