Friday, September 22, 2023
Homeஅரசியல்ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மனித உரிமை ஆணைக்குழு சந்திப்பு

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மனித உரிமை ஆணைக்குழு சந்திப்பு

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேரினையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலும் பொலிஸ் தடுப்பில் உள்ளவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டதுடன் கைதுக்குரிய காரணம் தொடர்பிலும் விசாரணை மேற்ண்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினமே நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸாரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular