ஆஸ்திரேலியா கிரிக்கெட் நட்சத்திரம் ஷேன் வோர்ன் மறைவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரமும் தலைசிறந்த லெக் ஸ்பின்னருமான ஷேன் வோர்ன், தனது 52வது வயதில் காலமானார்.

தாய்லாந்தின் கோ சாமுய்யில் மாரடைப்பால் காலமானார் என்று ஆஸ்திரேலிய நேரப்படி சனிக்கிழமை அதிகாலையில் (இலங்கையில் இன்று இரவு) வோர்னின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

“ஷேன் தனது வில்லாவில் சுயநினைவற்றுக் காணப்பட்டார். மருத்துவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேன் வோர்னின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 15 ஆண்டுகளாக நீடித்தது. அவர் 708 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தார். இது ஒரு ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் பெற்ற அதிகப்படியான டெஸ்ட் விக்கெட்டுக்களாகும். சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடமாகும்.